காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு கொண்டுசென்ற இஸ்ரேலிய படையினர்

ஜெனினில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் தங்கள் முன்பகுதியில் கட்டிப்போட்டவாறு கொண்டு சென்றதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது.

வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த காட்சியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது காயமடைந்த சந்தேகநபரையே இவ்வாறு தங்கள் வாகனத்தில் கட்டிப்போட்டு கொண்டு சென்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அம்புலன்சை கொண்டுவருமாறு கேட்டவேளை இஸ்ரேலிய படையினர் அவரை ஜீப்பின் பொனட்டின் கட்டுப்போட்டு கொண்டு சென்றனர் என அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை இஸ்ரேலிய இராணுவத்தினர் சர்வதேச செம்பிறை சங்கத்திடம் கையளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முஜாகெட் அஜ்மி என்ற ஒருவரையே இஸ்ரேலிய படையினர் இவ்வாறு கொண்டு சென்றனர் அவர் எந்த அமைப்பையும் சேராதவர் என பொதுமக்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button