2000 வருடங்கள் பழைமையான ஒயின்; அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

அகழ்வாராய்ச்சிகளில் பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது இயல்பு. அந்த வகையில், சுமார் 2000 வருடங்கள் பழைமையான ஒயினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்பெயினின் கார்மோனா நகரில், பழங்கால ரோமானிய கல்லறையொன்றின் அருகிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்லறையில் கிடைத்த குடத்திலிருந்து இந்த ஒயின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவொரு வெள்ளை ஒயினாக இருந்திருக்கலாம். இப்போது பழுப்பு நிறமாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஒயினைத் தவிர ரோமானியர் ஒருவரின் எலும்புகளும் குடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

பண்டைய காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும்பொழுது மதுவுடன் சேர்த்து அடக்கம் செய்வதாகவும் அது அவர்களை அடுத்த ஜென்மத்துக்கு செல்ல உதவுவதாகவும் நம்பப்பட்டது.

Oruvan

2000 years oldest wine

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button