மீண்டும் தமிழ் படத்தில் ஹர்பஜன் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது அடுத்த தமிழ் படத்தை உறுதி செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

அப்போது, சென்னை அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக,முக்கிய பண்டிகைகளின்போது தமிழில் டுவீட் செய்வார். இதனால் தமிழக சமூக வலைதள வாசிகளால் ஹர்பஜனுக்கு தமிழ்ப் புலவர் உள்ளிட்ட புனைப்பெயர்கள் வழங்கப்பட்டன. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போது வர்ணனையாளராக இருந்த ஹர்பஜன் சிங் இதனை தெரிவித்தார்.

மேலும், அதில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறினார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button