மெக்ஸிகோவில் என்றுமில்லாத வெப்ப அலை; செத்துமடியும் உயிரினங்கள்
மெக்ஸிகோவின் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக பல உயிரினங்கள் பரிதாபகரமாக உயிரிழக்கின்றன.
இதனடிப்படையில், வடக்கு மாகாணமான சிஹுவாஹுவாவில் உள்ள புஸ்டிலோஸ் தடாகத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளன.
அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியான காலநிலையுடன் குளத்தின் நீர்மட்டமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கும் மீன்களை சுகாதார பிரிவினர் பாதுகாப்பாக முறையில் கிருமிநாசினிகள் தெளித்து அப்புறப்படுத்தி வருததையும் புகைப்படங்களின் வாயிலாக காணக்கூடியதாக இருந்தது.




-
வெப்பத்தால் உயிரிழக்கும் பறவைகள் – விலங்குகள்
மெக்சிகோவின் வெப்ப அலை மற்றும் வறட்சிக்கு மத்தியில், துன்பப்படும் பறவைகள் குளிரூட்டப்பட்டு வருகின்றன. மேலும் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குரங்குகளை அரசு சாரா குழுக்கள் மீட்டு அவற்றிற்கு டிதெவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையில், அரசு நடத்தும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை குளிர்விப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது.
மெக்சிகோ நகர மீட்புக் குழுவினர், சிங்கங்களுக்கு உறைந்த இறைச்சி பாப்சிகல்களை வழங்குவதுடன், உறைந்த நிலையிலான எலி சடலங்களை ஆந்தைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட விலங்குகள் மிகவும் பாதுகாப்பான முறையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றும் பல உயிரினங்கள் மீட்பு பணிகள் மூலம் பாதுகாப்பாக மீட்க்கப்படுவதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
வனவிலங்குகளின் மீதான தாக்கத்தின் பெரும்பகுதி மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிகோவில் உணரப்படுகிறது.
ஏனெனில் வடக்கில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, அது பெரும்பாலும் பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அங்குள்ள விலங்குகள் தீவிர வெப்பம் மற்றும் வறட்சியை சமாளிக்கும் சில வழிமுறைகளைக் கையாண்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தெற்கில், ஹவ்லர் குரங்குகள் வெப்பத் தாக்குதலால் மரங்களில் இருந்து இறந்து தரையில் விழுந்துகிடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது வரை இறப்புகள் 250க்கும் அதிகமாக பதிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
![]()


