முல்லைத்தீவுக்கான விஜயம் மேற்கொண்ட மார்க் என்ட்ரோ பிரஞ்ச்!
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை இன்று (06) மேற்கொண்ட நிலையில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்
அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியையும் இன்று காலை அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் சட்டத்தரணி க.கனேஸ்வரன் ஆகியோரிடம் குறித்த புதைக்குழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கெண்டனர்.
![]()