விவாதங்களில் இருந்து ஒழிந்து ஓட மாட்டோம் : சஜித் பிரேமதாச!

சரியான பொருளாதார வேலைத்திட்டமும் சரியான பொருளாதாரக் குழுவும் இல்லாத தரப்பினரே பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு அச்சப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 209ஆவது நிகழ்வு ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல வேண்டிய பயணப் பாதை, தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் குறித்து விவாதமும் நேரிய கலந்துரையாடல்களும் இடம்பெற வேண்டும்.

இதன் மூலம் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

ஒவ்வொருவருக்கும் நல்ல நல்ல யோசனைகள் இருப்பதால், அந்த யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு, அதன் மூலம் யோசனைகள் முன்வைக்கப்படவேண்டும்.

பொது மக்கள் கருத்தாடல் நிகழுவதும் மிகவும் முக்கியமான விடயம். பொருளாதாரத்துறையில் முன்னேற்றம் குறித்து விவாதம் நடத்துவது அபத்தமானது என்று சிலர் கூறுகின்றனர்.

இரு தரப்பு பொருளாதார குழுக்களுக்குமிடையில் சினேகபூர்வ விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.

அதனையடுத்து, தலைவர்கள் இருவர்களுக்கும் இடையிலான விவாதத்திற்கு நாளை ஒதுக்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நான் உட்பட எனது குழுவினர் விவாதங்களில் இருந்து ஒழிந்து ஓட மாட்டோம்.

பொருளாதார தொலைநோக்கோ, வேலைத்திட்டமோ இல்லாதவர்கள் தான் இத்தகைய விவாதங்களில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *