சர்ச்சைகளை உருவாக்கி குளிர்காய நினைக்கிறது சமூகம்… இளையராஜா குறித்த கேள்விக்கு வைரமுத்து கோபம்!

சில வாரங்களுக்கு முன்னர் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று பேச ஆரம்பித்து “சில இடங்களில் இசை உயர்ந்து நிற்கும்.. சில இடங்களில் மொழி உயர்ந்து நிற்கும். இதைப் புரிந்தவன் ஞானி. புரியாதவன் அஞ்ஞானி” என்று பேசினார். இது இளையராஜாவை மறைமுகமாக தாக்குவது போல இருப்பதாகக் கண்டனங்கள் எழுந்தன.

கங்கை அமரன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான இசைஞானி ரசிகர்கள் வைரமுத்துவை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதுபோல வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துகளும் வெளிவந்தன. அதன் பின்னர் இளையராஜா ‘நான் என் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு சிம்ஃபனியை எழுதி முடித்துவிட்டேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வைரமுத்துவிடம் இப்போது இளையராஜா சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது “நான் எந்த மேடையிலும் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேறவே விரும்புகிறேன். ஆனால் காலம் சர்ச்சைகள் முடியவேண்டும் என நினைப்பதில்லை. சர்ச்சைகளை உருவாக்கி சமூகம் குளிர்காய விரும்புகிறது.  நான் சர்ச்சைகளில் இருந்து விலகி தமிழோடு நிற்கிறேன்” எனப் பேசியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *