தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை கீழே இறங்கியது
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பேரணியின் போது ஒரு மேடை மேடை கீழே இறங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் பாட்லிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவர்க்கு ஆதரவாக ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார். அவருடன் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார்.
இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()