கனடாவில் வாகன திருட்டுக்கள் அதிகரிப்பு: பலர் கைது

கனடாவில் (Canada) பாரிய வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்களை பீல் பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் மேலும் 10 பேரை கைது செய்ய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம்

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 322 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினர் விசாரணை

களவாடப்பட்ட 369 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 33.2 மில்லியன் டொலர் பெறுமதியான களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *