இந்தியா

காங்கிரசின் திட்டத்தை அமுல்படுத்த நான் அனுமதிக்கப்போவதில்லை!

”மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமுல்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை” என பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பாகல் கோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக எம்பிக்களில் எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர் எனவும், சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற எஸ்சி, எஸ்டி இன மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறார்கள் எனவும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *