மீண்டும் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து 90 டாலராக உள்ளது அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது

மேலும், ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *