மேடையில் கிட்டாரை உடைத்த இசைக்கலைஞர்

பிரபல பஞ்சாபி பாடகரான ஏ.பி. தில்லான் கோச்செல்லா மேடையில் கிட்டாரை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘சம்மர் ஹை’ ஹிட்மேக்கர் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மேடையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் காட்சி உள்ளது. அதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திய அவர் முடிவில் தனது கிட்டாரை மேடையிலேயே வீசி உடைப்பது போன்று காட்சி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த விசயங்களை மதிக்கவும். இது உங்களுக்கு அழகல்ல என கூறியுள்ளார். மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *