நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சிதைக்க முயற்சி: 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்
‘நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடைபெறுகிறது’ என 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் மீது அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளை கொச்சைப்படுத்தும் முயற்சிகள் சில குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சில குழுவின் நடவடிக்கை அதிகரிக்கிறது.
சிதைக்க முயற்சி
குறுகிய அரசியல் நலன்கள் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. தேவையற்ற அழுத்தம் கொடுத்து சாதகமான தீர்வை சில குழுவினர் பெறுவது வருத்தமளிக்கிறது. நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.