செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மற்றுமொரு விமான சேவை!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services (Sri Lanka) Ltd) (AASL) இன்டிகோ (Indigo) விமான சேவையுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி, இண்டிகோ ஜுன் 1, 2024 முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயல்பாடுகளுடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கும்.

நேரடி விமான சேவை இந்த இணைப்பு வட மாகாணத்தில் பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மத பிணைப்புகளை வலுப்படுத்தும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய (Athula Galketiya) தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *