“நடுகைக்காரி” ….. 68 ….. ஏலையா க.முருகதாசன்.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாகம் மாதர்
படாஅ முலைமேல் துகில் …
(திருக்குறள்:1087)
கம்பராமாயணத்தில் வரும்,இயல்பு உற என ஆரம்பிக்கும் பாடலை அறுத்துறுத்துச் சொன்ன கறுவல செல்லத்துரை மாஸ்ரர் ஒவ்வொரு வரியாக அதன் அர்தத்ததைச் சொல்லாமல் இராமன் வனவாசம் மேற்கொண்டு போகும் போது சீதைக்கு உதவி செய்யும் பெண்களும் வேறு ஒரு படகில் போகிறார்கள்.
அப்பொழுது துடுப்பு வலிப்பவர்கள் சோர்ந்து போயிருக்கும் போது அவர்கள் துடுப்பு வலிக்கும் போது படகுக்குள் எத்துப்பட்ட நீர்த்துளிகள் தோழியரின் உடைகளில் படுகின்றன.
அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகள் மெலிதானவை அதனால் தண்ணீர்த்துளிகள் அவர்களின் உடையை நனைக்க தோழியரின் மறைவிடங்களான அல்குல் அம்மெல்லிய உடைக்கூடாகத் தெரிய அதனைப் பார்த்த துடுப்பு வலிந்த ஆண்கள் உற்சாகமடைந்து சோர்வு நீங்கப் பெறுகின்றனர் இதுதான் இந்தப் பாடலின் அர்த்தம்,சர்வாம்பிகை ரீச்சர் இந்தப் பாடலையும் சொல்லி அதன் அர்த்தத்தையம் சொல்லியிருப்பார்தானே எனக் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்ல வேகமாகக் குறுக்கிட்ட சர்வாம்பிகை ரீச்சர் என்ன மாஸ்ரர் ஒரு மனேர்ஸ் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்கிறீர்கள் என்று சொல்ல இதிலென்ன மனேர்ஸ் இல்லாமல் கதைச்சனான் என்றவர் அப்ப நீங்கள் இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தத்;தை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தனீங்கள் என்று கேட்க துடுப்பு வலிச்சு சோர்ந்து போயிருந்த ஆண்கள் துடுப்பு வலிக்கும் போது தெறிச்ச தண்ணீர் அங்கை இருந்த பெண்களின் உடையில் பட அவர்களின் அந்த இடம் பளிச்சென்று தெரிய அதைப் பார்த்த துடுப்பை வலிச்சவர்கள் உற்சாகமடைந்தனர் என்று விளங்கப்படுத்தினனான் என்று சொல்லி முடிக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சில ஆசிரியர்கள் ரீச்சர் நீங்கள் மூடிமறைச்சு சொல்றதாலைதான் பிள்ளைகள் அதை அறிய உங்களைக் கேட்க மாட்டார்கள் பக்கத்திலை இருக்கிற சினேகிதியிட்:டை அந்த இடம் என்று எதையடி ரீச்சர் சொல்கிறா இதைத்தானே என்று கீழே பார்த்துக் கேட்க அதைத்தான் என்று மற்றவள் சொல்ல பூ..அது என்னவென்று ஏதோ எங்களுக்குத் தெரியாமாதிரி இவா நினைக்கிறா என்று பிள்ளையள் சொல்லுவினம் என்று சொன்னதும்,ஒரு ஆசிரியை சர்வாம்பிகை ஆசிரியையைப் பார்த்து நீங்கள் இப்பத்தையே பொடியங்கள் பொட்டையளைப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறியள் அவை எங்களைவிட விபரமானவை உங்களுக்குத் தெரியுமே ரீச்சர் எங்களைவிட அவைதான் பாலியல் புத்தகங்களை இரகசியமாக மறைச்சு வைச்சு வாசிக்கிறவை,எங்கடை காலம் வேறை அவையின்ரை காலம் வேறை என்று சொன்னதும் தர்மேஸ்வரி ரீச்சருக்கும் சர்வாம்பிகை ரீச்சருக்கும் தர்மசங்கடமாகிப் போச்சுது.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த இராஜதுரைர ஆசிரியர் கறுவல் செல்லத்துரை மாஸ்ரரைப் பார்த்து நீங்கள்: சொன்ன பாடலை நான் வேறுவிதமாயல்லா கேள்விப்பட்டனான்,இதிலை படகில் இருந்த பெண்கள் என்று வருகுது ஆனால் நான் படிக்கேக்கிலை என்ரை தமிழ் இலக்கிய மாஸ்ரர் பாலசுந்தரம் மாஸ்ரர் சீதை போன படகைப் பற்றித்தான் இப்பாடல் வந்தது என்று பன்னாடை போல தெரிஞ்சுது என்றும் அவர் வர்ணித்தவர்.
அப்பவும் என்ரை வகுப்பிலை பொம்பிளைப்பிள்ளையள்; இருந்தவைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏன் ரீச்சர் திருவள்ளுவர் சொல்லாததையா நான் வெளிப்படையாகச் சொல்லிவிட்:டேன் பெண்களின் மார்பகத்தின் கம்பீரத்தை திருவள்ளுவர்,
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
என்று எழுதியிருக்கிறார்,பெண்களின் இரு முலைகளின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் துணியானது யானையின் மிதப்பான நெற்றியின் மேல் போர்த்தப்பட்ட படாகத்தை ஒத்தது எனத் திருவள்ளுவர் இப்படியொரு ஒப்பீட்டை எவ்வளவுக்கு கவனித்து எழுதியிருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக்குறளின் அர்த்தம் இங்கையிருக்கிற எல்லாருக்குமே தெரியும்.இன்னொரு விசயம் ஆணினும் பெண்ணினதும் கம்பீரத்தை ஒப்பீடு செய்யும் போது பெண்களுக்கும் அவர்களின் மார்பும் கம்பீரத்தைக் கொடுப்பதாகும்.
நிமிர்ந்து நடக்கும் பெண்கள் எப்பொழுதும் கம்பீரமான அழகுடையவர்கள்.எங்கடை தாய்தகப்பன்ரை காலம் வேறை,எங்கடை இளமைக் காலத்தில் நாங்கள் விளக்கமில்லாதவர்களாகவா இருந்தோம்.எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்று எங்கடை தாய்தகப்பனுக்கும் தெரியும்.
இப்பத்தை பொடியங்களுக்கும் பொட்டையளுக்கும் எங்களைவிட பலமடங்கு தெரியும்,உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா யாழ்ப்பாணம் கில்னர் பில்டிங் தொழில்நுட்க் கல்லூரியிலும் உடுப்பிட்டி கலவன் பாடசாலையிலும் பால்வினைநோய் மருத்துவர் சிவசோதிநாதன் உடலுறவு சம்பந்தமாக ஏற்படும் பால்வினை நோய்பற்றி எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதுபற்றி மாணவர் மாணவிகளுக்கு வரைபடம் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார்.இது சுகாதர அமைச்சும் கல்வி அமைச்சும் சேர்ந்து செய்த திட்டம்.
மாணவ மாணவிகள் உற்சாகமாக கலகலப்பாக இருக்கட்டுமே என்பதற்காக கீரிமலையில் நடந்ததாக ஒரு கற்பனைக் கதையாக கோவணம் பாவாடைக் கதையைச் சொன்னனான்.இது ஒரு மிகச் சாதாரண விடயம்.
படிப்பிக்கிறதை விட்டிட்டு தர்மேஸ்வரி ரீச்சர் நான் என்ரை வகுப்பிலை என்ன கதைக்கிறன் என்றதைக் கவனமாக அதைக் காது குடுத்துக் கேட்டிட்டு வந்து
என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று இஞ்சை வந்து சொல்லுறா,ரீச்சர் இது உங்களுக்குத்தான் வெட்கம்.
கொஞ்ச நாளைக்கு முந்தி இப்பிடித்தான் சுந்தரராஜன் ரீச்சர் என்ரை வகுப்பிலை படிக்கிற ஒரு பொடியனும் பொட்டையும் லவ் பண்ணியினம் என்று அதை ஒரு பிரச்சினையாக்கி பிரின்சிபல் வரையும் கொண்டு போனார்.
இங்கை கல்யாணம் கட்டாத ஆசிரியையும் மாஸ்ரரும்கூட ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும்.அதை நாங்கள் பெரிசாக எடுக்கத் தேவையில்லை.அது அவையின்ரை உரிமை.
அதுமாதிரி பொடி பொட்டையளும் அவரவர்க்கு விருப்பமானவரோடை சினேகிதமாயிருக்கிறதிலை என்ன பிழை இருக்கு.அவை படிக்கினமா இல்லையா என்பதைத்தான் நாங்கள் கவனிக்க வேண்டுமே தவிர அவையை எங்கடை அடிமைகள் என்று நினைக்கக்கூடாது என்று பிரசங்கமே செய்து முடிக்கிறார் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரருக்கும் தர்மேஸ்வரி ரீச்சருக்குமிடையில் பெரிய போரே நடக்கப் போகுது அதை இரசிக்கவென்று காத்திருந்த சில ஆசிரிய ஆசிரியைகளுக்கு அது நடக்காமல் போனது ஏமாற்றமாகவிருந்தது.
எதுவுமே பேசாது தர்மேஸ்வரி ரீச்சரும் சர்வாம்பிகை ரீச்சரும் அமைதியாகினர்.கொஞ்ச நேரம் ஸ்ராப் றூம் அமைதியாக இருக்க அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு,மாஸ்ரர் இந்தப் பாட்டையுந்தானே தர்மேஸ்வரி ரீச்சர் படிப்பிச்சிருப்பார் அதன் அர்த்தத்தை எப்படி விளங்கப்படுத்தினவர் என்று சொல்வாரா என்ற இராஜதுரை மாஸ்ரர் பாடலைச் சொல்கிறார்,
பெரும்பகல் விருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செலவிலி மங்கையர் குறங்கில்
அரும்பு அணைய கொங்கை அயில் அம்பு அணைய உன் கண்
கரும்பு அணைய செஞ்சொல் நவில் கன்னியர் துயின்றனர்
சொல்லி முடித்ததும்,கறுவல் செல்லத்துரை மாஸ்ரரைப் பார்த்து மாஸ்ரர் இதுக்கும் நீங்களே அர்த்தம் சொன்னால் நல்லாயிருக்கும் என்று இராஜதுரை ஆசிரியர் சொல்ல,அடுத்து தான் படிப்பித்த கம்பராமாயணப் பாட்டையே இராஜதுரை ஆசிரியர் சொல்கிறார், இதற்கும் என்னையே அர்த்தம் சொல்லச் சொல்லி கறுவல் செல்லத்துரை ஆசிரியர் சொன்னாலும் சொல்வார் எனப் பதட்டத்துடன் முகம் கறுத்த நிலையில் தலையைக் குனிந்தபடி இருக்கிறார் சர்வாம்பிகை ஆசிரியை.
மற்றைய ஆசிரிய ஆசிரியைகளும் இன்னும் ஒரு வில்லங்கம் நடக்கப் போகுது,நமக்கென்ன நடக்கப் போவதை இரசிக்க வேண்டியதுதான்,ஏதோ சர்வாம்பிகை ஆசிரியைமீதும்,,தர்மேஸ்வரி ஆசிரியை மீதும் அனுதாபப்படுவது போல முகத்தை வைச்சுக் கொண்டாலும் நடக்கிறதை உள்ளுக்குள்ளை இரசிப்பம் என்று காத்திருந்தனர்.
ஆனால் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்,அந்தப் பாடலின் அர்த்தம் கம்பராமாயணம் படித்த எல்லாருக்குமே தெரியும்,அது சர்வாம்பிகை ரீச்சருக்கும் தெரியம் அவாவும் படிப்பிச்சிருப்பார்.
அவர் படிப்பிக்கிறதைக் கேட்டிட்டுப் போற பிள்ளைகளும் வேறை ஆட்களிட்டைக் கேட்காமல் விடமாட்டினம்.அந்தப் பாடலில் கொங்கைகள் குரும்பைகள் என்று வருகிற போதே பிள்ளைகளுக்கு அது எதைச் சொல்குpறதெண்டு விளங்கிவிடும்.
ஊருக்குள்ளை சாமத்தியப்படப் போறப் பிள்ளைகளின் நெஞ்சுப் பகுதியைப் பார்த்தே வயதானவை எடியே மோளுக்கு குரும்பை வரத்தொடங்கிவிட்டுது இப்பவோ நாளைக்கோ தெரியாது என்று தாய்மாருக்குச் சொல்றதை நாங்களே கேட்டிருப்பம்,
நான் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியிருக்க மாட்டன் ஆனால் தர்மேஸ்வரி ரீச்சர் நான் பகிடியாய் வகுப்பிலை கதைச்சதை ஒட்டுக் கேட்டிட்டு வந்து உலகப் போர் மாதிரியும் நான் படிக்கிற பிள்ளையளை கெடுக்கிறன் என்று சொன்னதாலுந்தான் சர்வாம்பிகை ரீச்சரே படிப்பிச்ச கம்பராமாயணப் பாடலையும்,திருவள்ளுவர் எழுதின திருக்குறளையும் உதாரணம் காட்டி அதிலை என்ன சொல்லியிருக்குதெண்டு சொன்னனான்.
எட்டாம் வகுப்புப் பிள்ளையளுக்கு என்ன சொல்ல வேண்டும்,பத்தாம் வகுப்புப் பிள்ளையளுக்கு என்னு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
நாங்கள் ஒன்றும் பெரிய உத்தமர்களும் இல்லை.இளந்தாரியிலை நாங்கள் செய்யாத கூத்தா.ஆருக்கும் தெரியாமல் களவாக கள்ளுக் குடித்தவர்களும் பீடி சிகரட் புகைத்தவர்களும் இருக்கிறார்கள்.
தாய் தகப்பனுக்குத் தெரியாமல் படம் பார்க்கப் போய் களவாக புளு ரிபன் கொட்டலில் பியர் குடித்தவர்களும் இருக்கிறார்கள்.குமர்ப்பிள்ளையள் குடிக்கேலையோ தவிர அவர்கள் கதைக்காத கதையா,ஒரு மனிதனுக்குள் பல குணங்களை உள்ள மனிதர்கள் பலர் இருப்பார்கள்.அதனால்தான் கிரேக்க தத்துவஞானியான சோக்கிரட்டீஸ் உனை நீ அறி என்று சொன்னார்.அந்த வாசகந்தான் எங்கள் கொலிஜ்ஜின் தாரக மந்திரமும்கூட என்று சொல்லி முடிக்கிறார்.
காதலிக்கிற வயதிலை பொடி பொட்டையள் காதலிக்கட்டுமே.அவையின்ரை படிப்புக் குழம்பாமல் இருந்தால் சரி.
எங்கடை கொலிஜ்யும் நிறையக் காதலர்களைச் சந்தித்திருக்கிறது.இங்கை மட்டுமல்ல எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இது நடக்கத்தான் செய்யுமஇஞ்சை படிச்ச பெஸ்ட புட்போல் பிளேயர் சச்சிதானந்தம் ஸ்கந்தா மாணவி சாந்hதினியைக் காதலிச்சுத்தான் கலியாணம் செய்தவன்.அந்தக் காதலுக்குக் காரணமாக அமஞ்சதே புட்போல் மாச்தான் எனவும் கறுவல் செல்லத்துரை சொன்னதை யாராலுமே மறுக்க முடியவில்லை.
மத்தியானச் சாப்பாட்டு நேரம் முடிஞ்சதற்கான மணி அடித்தது.எல்லா ஆசிரிய ஆசிரியைகளும் எழுந்து அவரவர் வகுப்புக்கு போக ஆயத்தமானார்கள்.அப்பொழுது
(தொடரும்)