ஸ்பெயினில் இரத்த மழை: பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியாவால்(UK) எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த மழையால், வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இரத்த மழை

இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இதன் காரணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந்த வார இறுதியில் பிரித்தானியாவை கேத்லீன்(Kathleen) என பெயரிடப்பட்டுள்ள புயல் வலிமையாக தாக்க இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *