ஜீவன் தொண்டமானுக்கு கௌரவிப்பு- உலகப் பொருளாதார மன்றம்!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த கௌரவத்தை பெறும் முதல் இலங்கை அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஜீவன் தொண்டமான், சுத்தமான நீர் அணுகலை மேற்படுத்தியதற்காகவும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காகவும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளதாக உலகப் பொருளாதார மன்றம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *