இந்தியா
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: பாக்.,ஐ சேர்ந்த இருவர் கைது

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரை உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முகமது அல்தப் பட், சையத் கஜன்பர் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும், நசீர் அலி காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. முகமது அல்தப் பட், ஐ.எஸ்.ஐ., உதவியுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினரிடம் பயிற்சி பெற்றதாக உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஐஎஸ்ஐ உதவியுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இவர்கள், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
![]()