இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி!

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பத்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க வுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் அமெரிக்காவிலும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களாலும், பா.ஜ.க ஆதரவாளர்களாலும் ஏற்பாடு செய்திருந்திருந்த குறித்தப் பேரணியில் பலர் பங்கு பற்றிருந்ததுடன், பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

இதன்போது, மோடியின் நலத்திட்டங்கள் மற்றும் இந்தியாவுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, “மோடி, மோடி” என்றும் “பாரத் மாதாக்கி ஜே” என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

மேலும் உத்தர பிரதேச முதல்வர் யோகியையும் பாராட்டி படங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *