ஐ.நா பார்வையாளர்கள் மீது இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்

ஐ.நா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தெற்கு லெபனானில் நேற்று நடைபெற்றுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தாலும், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் தொடர்ந்து மோதி வருகிறது.

தாக்குதல்
ஆகையால் இந்த தாக்குதலின் போது ஐ.நா அதிகாரிகள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காசா போரினால் 33 000 க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *