தமிழர்கள் மீன் பிடிக்க சுதந்திரம் இல்லை: சீமான் பேச்சு

ராமநாதபுரம்: மீன்பிடிக்க சுதந்திரம் இல்லாத நிலையில் தமிழர்கள் உள்ளனர் என்று ராமநாதபுரத்தில் சீமான் பேசினார்.
ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் சந்திர பிரபாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாயல்குடி, ராமநாதபுரம் அரண்மனையில் பேசியதாவது:
தமிழர்கள் ஜாதி, மதம், கடவுள் உணர்ச்சிகளில் ஊறிப்போய் கிடக்கின்றனர். அந்த உணர்வுகளில் இருந்து வெளியே வந்தால் வெற்றி பெறலாம். பிரதமர் மோடி தேர்தல் வந்தால் மக்களை சந்திக்க வருவார். பா.ஜ., கட்சிக்கு கிறிஸ்தவர், முஸ்லிம்களை எதிர்ப்பதே கொள்கை.
இந்தியாவை காப்பாற்ற வருகிறேன் என்கிறார் ஸ்டாலின்.தமிழர்களிடம் ஓட்டு வாங்கி தமிழர்களைப் பற்றி கவலைப்படவில்லை. 840 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீன் பிடிக்க கூட சுதந்திரம் இல்லாத நிலையில் தான் தமிழர்கள் இருக்கின்றனர்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற நவாஸ்கனி லோக்சபாவில் ஏதாவது ஒரு விஷயத்தை பேசியுள்ளார் என்பதை நிரூபித்தால் நவாஸ்கனிக்கு முழுமையாக ஓட்டு போட சொல்கிறேன்.
நான் நிறுத்தியுள்ள வேட்பாளரை மற்ற வேட்பாளர்களுடன் சீர்துாக்கிப் பாருங்கள். எதிலாவது குறைந்திருந்தால் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம். அனைத்து வகையிலும் எனது வேட்பாளர் சந்திர பிரபா சிறந்தவர். அவருக்கு மைக் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
![]()