இந்தியா

ஆசி பெற்றது தப்பா? சசிகலா காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்தது குறித்து புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார மேடையில் பயன்படுத்தி வரும் நிலையில் பெரியவர்களிடம் ஆசி வாங்கியது தவறா என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலா காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறு இல்லை என்றும் சசிகலா ஒரு பெரியவர் என்ற முறையில் தான் ஆசி வாங்கினேன் என்றும், நான் என்ன மூன்றாவது நபரிடமா ஆசி பெற்றேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மனம் திருந்தி வந்தால் அதிமுகவில் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல என்றும் 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவை நான் செயல்படுத்தினேன் என்றும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட விதத்தில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசை விமர்சனம் செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி தர்மம் என்பதற்காக மத்திய அரசை விமர்சனம் செய்யாமல் இருந்தோம் என்றும் தற்போது கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டதால் இனிமேல் விமர்சனம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *