கட்டுரைகள்

தேசியப்பறவை அங்கீகாரமும் – மயிலும்….- கே.ஆர்.இரமேஷ், கீரனூர்

சுதந்திரத்திரமாக  சுற்றி திரியும்  பறவைகள். மனிதர்களால் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி  கொன்று அழிக்கப்பட்டது உலகநாடுகளைவிழிப்படையச்செய்தது. அது 1960 ல் அகிலஉலக பறவைகள்பாதுகாப்புச்சபை மாநாட்டை டோக்கியோவில் நடத்திட தூண்டியது.

 

புலம்பெயரும் மற்றும் அருகிவரும் பறவையினங்கள் பாதுகாக்கவேண்டும்என்றும் அதற்காக ஒவ்வொரு நாடும் தங்களுக்கென்று ஒரு பறவையைதேசியப்பறவையாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அம்மாநாட்டில்தீர்மானிக்கப்பட்டது.

 

நமது நாடும் மற்ற நாடுகளைப்போல ஒரு குழுவை அமைத்துதேசியபறவையை தேர்ந்தெடுக்கும் பணியை முடுக்கியது. இந்தியதேசியபறவைக்கான தேடுதலில் மயிலோடு வேறுசில பறவைகளும்இடம்பெற்றன.

 

தேசியப்பறவை எது?

சிவப்புநிறதலை கொண்ட சாரசுக்கொக்கு, கருடன்என்றழைக்கப்படும் செம்பருந்து, இமயமலை பகுதிகளில் அதிகம்காணப்படும் நீர்வாழ் பறவையான அன்னப்பறவை, நெருப்புக்கோழிபோன்ற உருவம் கொண்ட கானமயில் என பறவைகள் அணிவகுத்தன.

 

ஒவ்வொரு பறவையின் தனிச்சிறப்புகள் மற்றும் அதன் குறைகள் குறித்துவிவாதிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் தோன்றியதாக கருதப்படும்மயில் இலங்கை, பர்மா, தெற்கு ஆசியப்பகுதிகளிலும் காணப்படுவதால்,மற்றநாடுகளின் எண்ணத்தில் உதயமாகும் முன் மயிலை முன்மொழிந்துஅறிவித்தது இந்தியா.

 

அதுவரை இந்தியாவின் தேசியப்பறவை என்கிற அங்கீகாரம்தடித்த காலோடு நெருப்புக்கோழி போன்ற உருவம் கொண்டகானமயிலுக்கு இருந்து வந்தது. பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம்அலியின் விருப்பமும் தெரிவும்தான் அதற்கு காரணம். எனினும் IndianBustard என்கிற கானமயிலின் பெயர் தவறாக உச்சரிக்கப்படலாம்என்பதால் அப்பறவை நிராகரிக்கப்பட்டது.

 

இவ்வாறு ஒருசிலகாரணங்களுக்காக ஒவ்வொரு பறவையும் நிராகரிக்கப்பட்டதுஎன்பதைவிட மயிலின் தனித்தன்மையால் அது முக்கியத்துவம்பெற்றது என்பதே பொருத்தமாக இருக்கும். எனினும் கானமயில்தற்போது இராஜஸ்தானின் மாநில பறவையாக உள்ளது.

 

சாரசுக்கொக்கு உத்திரப்பிரதேச மாநில பறவை. செம்பருந்து இந்தியஇராணுவ முத்திரையில் இடம்பிடித்துக்கொண்டது. வடிகட்டும்வாயுறுப்புக்கொண்ட அன்னப்பறவை டென்மார்க், பின்லாந்துநாடுகளின் தேசியபறவையானது.

 

கருத்தமேனியோடு இந்தியா முழுவதும் காணப்படும் புத்திக்கூர்மையானகாக்கைக் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அண்டைநாடானபூட்டானின் தேசியபறவையான அண்டக்காக்கையோடு வேறுபடுத்தி அறிவதுகடினம் என்பதால் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

 

வேறு எந்தநாட்டின் தேசியப்பறவையோடு நமதுதேசியப்பறவை ஒத்துப் போகக்கூடாது. இந்திய குடிமகன்அனைவராலும் எளிதில் அடையாளம் காணப்படவேண்டும் என்கிறவரையறைகளும் மயிலை தேர்ந்தெடுக்க வழிகோலியது. அதன்படிஇந்திய அரசாங்கம் 1963 ஆம் ஆண்டு முதிர்ந்த ஆண்மயிலை (Peacock)இந்தியாவின் தேசியபறவை என அறிவித்தது. இதன் அறிவியல் பெயர்Pavo cristatus.

 

ஆண்மயில் தேர்வானது ஏன்?

ஆண்மயில் உருவத்தில் பெரியது. அழகிய, கம்பீரமானதோற்றம். மார்பு கழுத்துப்பகுதி ஒளிரும் நிறத்தில் இருக்கும்.காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கும் வண்ணமயமான மிக நீண்டதோகை கொண்டது. பெண்மயில் உடலோ மங்கலான பச்சை மற்றும்சாம்பல் கலந்த நிறத்தில் இருக்கும். நீண்டதோகை கிடையாது. வேறுஎந்த பறவையினங்களிலும் காண இயலாத இச்சிறப்புகள் ஆண்மயில்தேர்வாக முக்கிய காரணம் எனலாம். மேலும், “மழை வருவதுமயிலுக்குத் தெரியும்” எனும் திரையிசை பாடல் வரிகளுக்கு ஏற்பகார்மேகத்தை கண்டதும் தோகைவிரித்து ஆடுவது காண்போரைமெய்சிலிர்க்க வைக்கும். அதனால் நட(ன)மாடும் வானிலை மையம்என்று அழைக்கப்படுவதுண்டு.

 

சார்லஸ் டார்வின் இயற்கைதேர்வு கோட்பாட்டின்படி மாறிவரும்இயற்கைச்சூழலை எதிர்கொண்டு வாழும்திறன் படைத்த இளம்தலைமுறையை உருவாக்க, பெண்மயில் தனக்கு பொருத்தமானதுணை எது எனத் தேர்ந்தெடுத்து இணைசேர அனுமதிக்கும். தனதுதிறமையை வெளிக்காட்டி பெண்மயிலை கவருவதற்காக ஆண்மயில்தோகைவிரித்து ஆடுவது கூடுதல் சிறப்பு எனலாம்.

 

மயில் பிரம்மச்சாரியப் பறவையா?

மயில் உடல் ரீதியான இனச்சேர்கையில் ஈடுபடுவதில்லை அது ஒருபிரம்மச்சாரியப் பறவை என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனைமறுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அவை கோழியினம் போன்றேஇனச்சேர்க்கையில் ஈடுபடும். ஆனால் அதனை ரகசியமாகநிறைவேற்றிக் கொள்கின்றன என்கின்றனர். மேலும், வேறு எந்தபறவைக்கும் இல்லாத கூடுதல் சிறப்பு இதன் உடல்செல்களில் 99தனித்துவமான மரபணுக்கள் காணப்படுகின்றன. மயிலின் அழகு,கம்பீரம், நோய் எதிர்ப்புத்திறன், அதிக. வாழ்நாள் (ஏறக்குறைய 25ஆண்டுகள்) இவை அனைத்திற்கும் இந்த மரபணுக்களே காரணம்என்கின்றனர் மரபியல் வல்லுனர்கள்.

 

பன்முகத்தன்மை :

மாறுபட்ட நில அமைப்பும் வேறுபட்ட தட்பவெப்பநிலையும் கொண்ட இந்தியாவின், பெரும்பாலானபகுதிகளில் மயிலைக் காணலாம். அதுவும் மக்கள்வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகில் கூட்டமாக வாழும்இயல்புடையது. நாட்டு மக்களிடையே பல்வேறுபட்ட மதவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் காணப்பட்டாலும்மயிலை கொண்டாடுவதில் அனைவரையும் ஒன்றுபடவைக்கிறது. கிரேக்க வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது.

 

பன்னெடுங்காலம் முதல் இன்றுவரை மாடமாளிகைகள்,ஓவியங்கள், சிற்பங்கள் என அனைத்திலும் மயிலுக்குதனிச்சிறப்புண்டு. சங்ககாலம் தொடங்கி இன்றுவரைகலை இலக்கியங்களில் அதிகம் இடம்பெறும்பறவையென்றால் அது மயில் மட்டுமே எனஎழுதிக்கொண்டிருக்கும்போது, அகவும் குரல் கேட்டுஓடினேன். பக்கத்துக் குடியிருப்பில் ஆண்மயில்.உற்றுநோக்கினேன். ஆச்சர்யம் அதுவும் என்னைஉற்றுநோக்கியது. அந்த பார்வைக்கு என்ன பொருள் எனஎண்ணியபோது மனக்குரல் சொன்னது. “பேரு வச்சிகளேஎனக்கு சோறு வச்சிகளா?”. என்று கேட்பதுபோலஇருந்தது.

 

பெருமைக்குரிய இந்திய தேசியஅடையாளமான மயில் (மட்டுமல்லாது அனைத்துபறவையினங்களும்) மனிதர்களின் நேரடி மற்றும்மறைமுக தாக்குதல்களுக்கு உட்படாமல் பூமியில்சுதந்திரமாக வாழ்வதற்கு அவைகளுக்கும்உரிமையுண்டுதானே?. அன்றைய டோக்கியோ மாநாட்டுதீர்மானங்களை நினைவில் கொண்டு, ஒவ்வொருஉயிரினமும் காக்கப்பட வேண்டும் என்பதையே மயில்உணர்த்துகிறது.

 

– கே.ஆர்.இரமேஷ், கீரனூர்

நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தலையில கட்டு போட்டுகிட்டு வந்தார். என்ன விவரம்னு கேட்டோம். எல்லாம் உங்களாலதான் னாரு..  மயில் கட்டுரைய படிச்சிட்டு,  ஆண் மயில்தான் அழகுன்னா அத ஏங்க பெண்களோடு ஒப்பிடுறாங்க னு வீட்டம்மா கேட்டாங்க.  கலர் கலரா டிரஸ் உடுத்தாம  மேக்கப்பு இல்லாம இருந்தா பெண்கள் பெண் மயில் மாதிரி தான் இருப்பாங்க னு சொல்லிப்புட்டேன் அதுக்குத்தான் இந்தகட்டு  ன்னார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.