கட்டுரைகள்

தென்துருவத்தில் வேற்றுக்கிரகத்தினரின் நாடு….. ஏலையா க.முருகதாசன்

பூகற்பவியலாளர்களாலோ, பல நாட்டு விஞ்ஞானக் கழகங்களாலோ அண்ட முடியாத வேற்றுக்கிரகத்தினரின் நாடொன்று பூமியில் இருக்கின்றது.

இது தென் துருவத்தின் பூமியின் நடு அச்சுப் பகுதியில் இருக்கின்றது.பூமியின் தென் தருவப்பகுதிக்கு எவரும் இதுவரையில் போகவில்லை,போக வேண்டும் என்று எவரும் அதற்கானமுயற்சிகளை எடுக்கவில்லை.

அவுஸ்திரேலியாவைக் கடந்து நியூசிலாந்திற்கு தென் கிழக்காக இந்த நாடு இருக்கின்றது.இந்தநாட்டின் எல்லைகள் மின்னாந்த அலைச்சுவர்களால் கட்டப்பட்டிருக்கின்றது.ஓவ்வொரு நாட்டுக்குமிடையில் விமானப் போக்கவரத்தச் சேவை இருப்பது போலவேற்றுக்கிரகத்தினரின் இந்த மர்ம தேசத்துக்கும் வேற்றுக்கிரகத்தினர் இருக்கின்ற மற்றையகிரகங்களுக்கமிடையில் பறக்கும் தட்டுகள் வழியாகவும் முட்டைவடிவ விமானம் வழியாகவும்தினசரி போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது.

தென்துருவப் பகுதியில் வேற்றுக்கிரகத்தினர் நிலை கொண்டுள்ள நாடு ஒன்றிருப்பதாகஅரசல்புரசலாக அறிந்து கொண்டாலும் அந்த நாட்டை எந்தவொரு நாடும் அணுக முடியாது.

விமானங்கள் அந்த நாட்டின் எல்லையை பல நூறு மைல்களுப்பாலிருந்துகூட அணுக முடியாது.

விமானங்களில் இயந்திரங்கள் தானாகவே நின்று போவதால் விமானங்கள் காணமல்போயுள்ளன.அதனால் விமானங்களின் பயணப் பாதைகள் அப்பதியைக் கொண்டிருப்பதில்லை.

இப்பொழுதெல்லாம் தென்துருவத்தில் வெற்றுக்கிரகத்தினரின் நாடு இருப்பதை அறிந்துகொண்ட அனைத்து நாடுகளும் ஆகாயத்தில் தமது பயணப்பாதையை வேற்றுக்கிரகத்தினரின்நாடிருக்கும் இடத்திலிருந்து பலநூறு கிலோமீற்றருக்கு அப்பால் நிர்ணயத்திருக்கின்றன.

பறந்து கொண்டிருந்த விமானங்கள் திடீரென காணாமல் போனது பற்றிக் செய்திகள் வழியாகக்கேள்விப்பட்டிருப்பீர்கள்.அதனைக் கடத்தி தமது நாட்டுக்குக் கொண்டு சென்றவர்கள்வேற்றுக்கிரகத்தினரே அதில் இருந்த பயணிகளில் பலர் தென்துருவ நாட்டில் இன்னொருவாழ்க்கையை அங்குள்ள வேற்றுக்கிரகத்தினருடன் உறவாடி வாழப் பழகிவிட்டனர்.

கடத்தப்பட்டவர்களில் மிகுதியானவர்களை வேற்றுக்கிரகங்களுக்கு கொண்டுசென்றுவிட்டனர்.தென் துருவத்தில் இருக்கும் வேற்றுக்கிரகத்தினர் மனிதர்களைப் போன்றஉருவமுடையவர்களே.

பூமி மனிதர்களையும் வேற்றுக்கிரகத்தினரையம் ஒன்றாகவிட்டால் வேறுபாட்டைக்கண்டுபிடிக்கவே முடியாது.அது போல வேற்றுக்கிரகத்தில். இருப்பவர்களும் மனிதர்களைப்போன்றவர்களே.

வேற்றுக்கிரகத்தில் இருப்பவர்கள் பூமி மனிதர்களைவிட விஞ்ஞானத்தில் பலமடங்குமுன்னேறியவர்களாக இருக்கின்றனர்.

தேன்துருவ வேறு;றக்கிரகத்தினரின் நாடு வேற்றுக்கிரகங்களின் தொடர்புத்தளமாக இயங்கிவருகின்றது.பூமி மனிதர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான முன்னேற்றங்களைக்கண்காணிப்பதே தென்துருவ வேற்றக்கிரகத்தினரின் வேலை.

பூமி மனிதர்களுக்குள் ஆண் பெண் இருப்பது போலவே தென்துருவ வேற்றுக்கிரகத்தினரிலும்ஆண் பெண் உண்டு.அது மட்டுமல்லாமல் மற்றைய வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்களும் பூமிமனிதர்களைப் போன்றவர்களே.

அதே வேளை சில கிரகங்களில் வேற்று உருவங்களிலும் உயிரினங்கள் உண்டு.இராட்சதகாய்கறிகளுடன் மிகப் பெரிய பல வகையான மிருகங்கள் மிக மிகப் பெரிய பாம்பு வகைகள்அங்கு இருக்கின்றன.

ஏலியன்ஸ் என்றொரு வேற்றக்கிரக உயிரினத்தை உலகம் நம்பிக்கொண்டிருக்கின்றது.உண்மையில் பூமி மனிதர்கள் தம்மைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடாதுஎன்பகதற்காகவும் மனிதர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும். அந்த உருவத்தைமனிதர்களின் கண்களில் படச் செய்தவர்கள் வேற்றுக்கிரகத்தினரே.

மனிதர்கள் பூமியில் தோன்றினரா என்பதில் மாறுபட்ட ஆய்வுகள் உண்டு.குறிப்பாக அமீபாஎன்ற ஒரு கல உயிரினத்தின் படிப்படியான வளிர்ச்சியம் இறுதியாக தோற்றம் பெற்ற மனிதக்குரங்கிலிருந்தே மனிதர்கள் கூப்படைந்தார்கள் என்ற கோட்பாடும்,ஆதாம் ஏவளே மனிதத்தோற்றுவாய்க்குக் காரணம் என மதரீதியான கூற்றும் இவை இரண்டையும் மறுத்து மனிதர்கள்பூமியால் பூமியில் தோன்றவில்லை,மனிதர்களால் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டகிரகங்களுக்கு அப்பால்,மனித வேற்று உயிரினங்கள் உட்பட பல கிரகங்களில் வாழுகின்றமனித உயிரினங்களையே அவர்களின் ஆற்றல்மிகு விஞ்ஞானத்தால் பூமிக்குகொண்டுவரப்பட்டவர்கள் என உறுதியாகக் கூறப்படுகின்றது.

எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் மிதந்து கொண்டிருக்கும் கிரகங்களில் பூமியும் ஒன்று.பூமியில்மனிதர்கள் உட்பட பலவகை உயிரினங்கள் பலவகைத் தாவரங்கள் நீர்நிலைகள் இன்னும்கனிமப் பொருட்கள் என பூமி உள்ளடக்கிய பொருட்கள் போல சூரியமண்டலக் கிரகங்கள்உட்பட குத்துமதிப்பாக 170 பில்லியன் பால்வெளி மண்டலங்களிலும் அவை இருப்பதாகவிஞ்ஞான உலகம் அறுதியிடுகின்றது.

சூரிய குடும்பத்துக்கு அப்பாலிருக்கும்; கிரகங்களிலிருந்தே மனிதர்கள் பூமிக்குகொண்டுவரப்பட்டார்கள் என்ற கோட்பாட்டின்படி பார்க்கும் போது பூமியில் மட்டுமல்லவேற்றுக்கிரகங்களிலும் மனித உயிரினம் உண்டு என்பது தெளிவாகின்றது.அதே வேளை பூமியில் இருக்கின்ற மனித உயிரினம் போன்ற வடிவமாகினும் அவர்களின்தலையின் பிடரிப் பகுதி கொஞ்சம் பின்னோக்கி இருக்கும்.

இது போன்ற தலையுடையவர்கள் பூமியிலும் இருக்கின்றார்கள்.எகிப்து மக்களுடன் உடல்ரீதியான உறவுகளை அவர்கள் மேற்கொண்டனர் என்றும் பழைய எகிப்தியர்களின் தலையின்பின்பகுதி கொஞ்சம் நீளமாக இருந்தன என்றும் ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

பல இலட்சம் வருடங்களுக்கு முன்பு வேற்றுக்கிரகத்திலிருந்து மனிதர்களை பூமியில் கொண்டுவந்துவிட்டதன் சனப்பெருக்கமே இன்றைய உலகின் மனிதர்களின் தொகை என்பதைபிரபஞ்சம் மற்றும் கிரகங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானக் கழகங்கள்நம்புகின்றன.

ஏகிப்திய மக்களுடன் மட்டுமல்லாது பூமியில் உள்ள அனைத்து மனிதர்களில் சிலருடன் உடல்ரீதியான உறவுகளை மேற்கொண்டமை ஆங்காங்கே நடைபெற்றிருக்கின்றன.அதனால்தான்பூமி மனிதர்களுக்கும் ஆற்றல் பெருகியது என்கின்றன ஆய்வுகள்.

பூமியிலிருக்கும் வேற்றுக்கிரகத்தினரின் நாட்டிலிருந்து அந்த மனிதர்கள் பல நாடுகளில்மனிதர்களோடு மனிதர்களாக கலந்து திரிந்து இரகசியங்களை அறிந்து வருகிறார்கள்.

பலவாயிரம் வருடங்களுக்கு முன்பு மாயா இனத்தினர் அனைவரும் இரவோடு இரவாகக்காணாமல் போனதை அறிவீர்கள்.அவர்களை வேற்றுக்கிரகத்தினரே கடத்திச் சென்றது போலஇப்பொழுதும் மனிதர்கள் வேற்றக்கிரகத்தினரால் கடத்தப்படுவது நடந்துகொண்டேதானிருக்கின்றது.

தென்துருவப் பகுதியின் மத்தியில் இருக்கும் வேற்றக்கிரகத்தினரின் நாட்டினை பூமிமனிதர்களால் அடையாளம் காண முடியாதவாறு அவர்களின் நாடு மின்காந்த அலைகளால்போர்த்தப்பட்டிருக்கின்றது.

ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும் சட்லைட்டுகளாலும் இந்த நாட்டை கண்டுபிடிக்கஇயலாது என்பதைவிட ,வேற்றுக்கிகைத்தினரின் நாட்டிலிருந்து சட்லைட்டுகளுக்குஅனுப்படும் மின்னகாந்த அலைகள் அதனைத் தடுத்து வருகின்றது.

இப்படியொரு நாடு பூமியிலிருப்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரிவதுடன் அவர்களுக்குவேற்றுக்கிரக மனிதர்களைப்பற்றிய இன்னும் பல இரகசியங்கள் தெரியும்.

வேற்றுக்கிரகத்தினரின் நாட்டிலிருந்து பறக்கும் வாகனங்கள் போய்வருவது மிக அதிகதூரத்திலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் போய்வருவது போல மங்கலாகத் தெரியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.