சமூக ஆர்வலர்- பதிப்பாளர் “ மாத்தளை செல்வா “ என்ற எச். எச். விக்கிரமசிங்கா….. முருகபூபதி
இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில்கவனத்திற்குரியது. சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில்கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்குவதும் மாத்தளைதான்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து கப்பல் மார்க்கமாகஅழைத்துவரப்பட்ட இந்தியத்தமிழர்கள், தலைமன்னாரிலிருந்து கால் நடையாகச்சென்றனர். அவர்கள் முதலில் தங்கவிடப்பட்ட பிரதேசம் மாத்தளை.
இந்த வரலாற்றுச்செய்திக்கு ஆதாரமாகத் திகழ்வது அங்கு எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம். 1983 கலவர காலத்தில் இங்கிருந்த தேர்களையும்கயவர்கள் எரித்தார்கள்.
ஒரு காலத்தில் மாத்தளை நகரசபையின் தலைவராக விளங்கியவரும், எலிசபெத்மகாராணி இலங்கை வந்தவேளையில் அவரது கையை குலுக்கி வரவேற்றவரும்,பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இலங்கை இருந்தபோது, அந்த ஏகாதிபத்தியத்தைஎதிர்த்து கிளர்ச்சி செய்த வீர புறான் அப்புவுக்கு நினைவுச்சின்னம் எழுப்பியவருமானபெரியார் தம்பிராஜா அய்யாவையும் அந்தக்கயவர் கூட்டம் உயிரோடு எரித்தது.
இவ்வாறு தீக்குளித்த சீதையாக புனர்ஜன்மம் எடுத்த பூமியான மாத்தளை, பலஎழுத்தாளர்களையும் சமூக நலப்பணியாளர்களையும் எமக்கு வரவாக்கியிருக்கிறது.அவர்களில் சிலர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். நாடக திரைப்பட கலைஞர்மாத்தளை கார்த்திகேசு, எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன்,ஏ.பி. வி. கோமஸ், மலரன்பன். இவர்களின் வரிசையில் மாத்தளை செல்வா என நாம்அழைக்கும் எச். எச். விக்கிரமசிங்கா.
1970 களில் எனக்கு வீரகேசரியுடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் அங்கேவிநியோகப்பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் அறிமுகமானார்.நான் 1972 இல் வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக இயங்கியபோது, அங்குஅடிக்கடி செல்லநேர்ந்த வேளைகளில் முதல் முதலில் சந்தித்தேன். 1973 இல்மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு அட்டனில் நடந்தபோதுதான்எமக்கிடையே நட்புறவு மலர்ந்தது. இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்துபொதுவுடமைக்கட்சியின் தோழர் பாலதண்டாயுதமும் வந்திருந்தார். கோகிலம்சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது.மாத்தளை செல்வாவுடனான நட்புறவு அரைநூற்றாண்டையும் கடந்து விக்கினமின்றிதொடருகின்றது.
வடக்கு மாத்தளையை பூர்வீகமாகக்கொண்டிருந்த இவருக்கு இலங்கை எங்கும்நண்பர்கள். அவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும்,மாத்திரமின்றி அரசியல் வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள்.
முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடனும் இவருக்கு நட்புறவுஇருந்தது. மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடனும் உறவைப்பேணியவர்.பின்னாளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவராகவும் அமைச்சராகவும்விளங்கிய சந்திரசேகரனின் பிரத்தியேக பொது சனத் தொடர்பு அதிகாரியாகவும்இயங்கியவர்.
அத்துடன் எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், மு. நித்தியானந்தன், மாத்தளைசோமு, மாத்தளை வடிவேலன், இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், தெளிவத்தைஜோசப், மலரன்பன், கவிஞர்கள் ஈழவாணன், புதுவை இரத்தினதுரை முதலானஆளுமைகளுடனும் நட்புறவைப் பேணியவர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்த மாத்தளைசெல்வாவிடம் அன்று கண்டஅதே சுறுசுறுப்பை இன்றும் காண்கின்றேன்.தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாத வித்தை அறிந்தவர்.இடதுசாரி அரசியலில் இவருக்கிருந்த ஈடுபாட்டினால், அரசியல் ரீதியாக ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கும் பலதடவை ஆளானவர். சிறைவாசமும்அனுபவித்தவர்.
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இவரது இயல்பு. மாத்தளையில்பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களின் தேவைகளை அரச மட்டத்தில் பேசிகவனித்தவர்.இவரது தன்னலமற்ற சேவைகளை மு. நித்தியானந்தன், மாத்தளை வடிவேலன்,மலரன்பன் ஆகியோர் எழுத்திலும் பதிவுசெய்துள்ளனர்.
மாத்தளை செல்வாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அப்பால், என்னைபெரிதும் கவர்ந்த விடயம், அவர் மற்றவர்களின் குறிப்பாக மலையகபடைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருவதில் காண்பிக்கும் ஆர்வமும்அக்கறையும்தான்.
வீரகேசரி, மற்றும் தமிழ் நாடு தினமணி பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவிளங்கிய ( அமரர் ) எஸ். எம். கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும்சித்திரித்த தொகுப்பு நூல், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆகியோரின் கதைத்தொகுப்புகள் முதலானவற்றை வெளியிட்டிருக்கும் மாத்தளை செல்வா, மூத்தகவிஞர் நவாலியூர் சொக்கநாதர் இயற்றிய மாத்தளை முத்துமாரியம்மன்குறவஞ்சியையும் நூலாக பதிப்பித்தவர்.திருமுருக கிருபானந்தவாரியார் அந்த நூலுக்கு அணிந்துரையும் கவிஞர் வி. கந்தனம்மதிப்புரையும் எழுதியிருக்கிறார்கள்.
அத்துடன் நவாலியூர் சொக்கநாதர், கந்தவனம், ஈழவாணன் ஆகியோர் இணைந்துஎழுதிய சிட்டுக்குருவி என்ற நூலையும் வெளியிட்டவர்தான் மாத்தளை செல்வா.கடந்த 03 ஆம் திகதி 75 வயது பூர்த்தி பவளவிழாவையும் எம்மத்தியில் இல்லாமலேகடந்திருக்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், மாத்தளை செல்வா பற்றி ஒருபாடலை பாடியிருக்கிறார் எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள்.
“ அக்கிரமங்கள் எங்கெங்கு பூத்திட்டாலும், அதை அழிக்க ஓடிவரும் எனதருமைநண்பன் விக்கிரமசிங்காவின் பார்வை பட்டதன் பின்பே கவிஞனானேன். “இந்த வரிகள் கவிஞரின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றோ..? என்னவோ..? நானறியேன்.எனினும் நான் அறிந்தவரையிலும் அறச்சீற்றத்துடன் வாழ்க்கைப்பயணத்தைமாத்தளை செல்வா தொடர்ந்தமையால், பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும்ஆளானவர்தான்.
இவர் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது, வீட்டிலிருந்து தனக்குமாத்திரமின்றி, தன்னோடு இருந்த பிற கைதிகளுக்கும் உணவு வரவழைத்து பகிர்ந்துஉண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டிருந்தவர்.
“ செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு “ என்பது குறள்.
நாம் தேடிச்சேமிப்பதற்கு நட்பைவிட வேறு அரியபொருள் இல்லை. அதுஇருந்துவிட்டால், எம்மை எத்தகைய இக்கட்டிலும் அது காப்பாற்றும்.ஒரு முக்கிய இடதுசாரித்தலைவரைக்கூட அவர் சந்தித்த அடக்குமுறைஇக்கட்டிலிருந்து காப்பாற்றியவர்தான் மாத்தளை செல்வா.அதனால் நேர்ந்த நெருக்கடிகளையும் தனக்கேயுரிய சாதுரிய இயல்புகளினால்சமாளித்தவர்.
மாத்தளை செல்வாவின் தொடர்பாடல் இலங்கை – இந்தியாவுக்கு அப்பால், தமிழர்புலம்பெயர்ந்த நாடுகளிலும் நீடிக்கிறது.இலங்கை அரசியல் வரலாற்றில் மாத்தளைக்கு முக்கிய இடமிருப்பதுபோன்று,மலையக இலக்கிய – பதிப்புத்துறை வரலாற்றில் மாத்தளை செல்வாவுக்கும் முக்கியஇடமிருக்கிறது.