குறைகளைக் கொண்டாடும் வினோத நிகழ்ச்சி – பட்டம் வென்ற நாய்

உலகில் அழகில்லாத நாய் என அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்கூட்டர் எனும் நாய்க்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டி, நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்க உதவுகிறது.

குறிப்பாக துன்பங்களைக் கடந்து வாழும் ஜீவன்களின் குறைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக அது கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்தமுறை நடந்த போட்டியில் Chinese crested வகை நாயான ஸ்கூட்டருக்கு பட்டம் கிடைத்துள்ளது.

இந்த நாயானது குறைவான முடியுடன் காணப்படுவதுடன், பிறப்பிலேயே அதன் பின்னங்கால்கள் பின்னோக்கி இருந்துள்ளது.

இதன்காரணமாக ஸ்கூட்டரால் நடக்கவே முடியாது என்று கூறப்பட்டது.

பின்னர் அதற்கு சிகிச்சை வழங்கப்பட்டு, தனிப்பட்ட கருவியின் உதவியால் இப்போது ஸ்கூட்டர் நடக்கிறது.

அனைத்து இன்னல்களையும் கடந்து விடாமுயற்சி என்றால் என்ன என்பதை ஸ்கூட்டர் உணர்த்தி இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button