60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு : அறுவை சிகிச்சையில் அகற்றம்

மஹாராஷ்டிராவை சேர்ந்த 60 வயது முதியவர், தனது வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்துக் கொண்டு இரட்டை சிசுவை சுமந்து கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை மருத்துவர்கள் அகற்றினர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய் பகத்,60 இவருக்கு 20 வயது முதலே வயிறு சற்று பெரிதாக இருந்த நிலையில்,1999-ம் ஆண்டு வயிறு மிகவும் பெரிதாக துவங்கியது. நாளடையில் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.இதையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர்.முதலில் வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் நினைத்தனர். பின்னர் தான் தெரிந்தது அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் சிசு உருவாகியுள்ளது தெரியவந்தது.இதுவே மருத்துவத் துறையில் அரிதான நிகழ்வு என கூறப்புடுகிறது.

இதையடுத்து சஞ்சய் பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்டது. அப்போது கை கால்கள், தலை மயிர், பிறப்புறுப்பு என உடற்பாகங்கள் கிடைத்தன.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சய் பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button