அமெரிக்காவில் குடும்ப உறவினரின் உயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிர்மிங்காம் நகரில் இருந்து வடமேற்கே 32 மைல்கள் தொலைவில் சிப்சி என்ற சிறிய நகரில் வசித்து வருபவர் லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் (வயது 61). இவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

அந்த தகவலை வேறு யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலுடன் லியாண்ட்ரூ ஒன்றாக வசித்து வந்து உள்ளார். போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததும் அவர்கள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். இதுபற்றி சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், ஸ்மித் தனது உறவினர் உயிரிழந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலுடன் ஒன்றாக வசித்து வந்தது போலீசாருக்கு தெரிந்தது.

அவர் உடலை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வாக்கர் கவுன்டி சிறைக்கு அனுப்பி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், அந்த நபர் உயிரிழந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன மற்றும் ஸ்மித்தின் சட்ட நடவடிக்கைகள் பற்றிய பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் மனித உடலை இதுபோன்று நடத்துவது குடும்ப உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய சட்டவிரோத செயலாகும். அந்த நபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button