இலக்கியச்சோலை

கனடாவில் நடந்த தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது விழா!

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் எனக்கருதும் ஒருவருக்கு, ‘ இயல் விருது ‘ எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் வழங்கப்படுகிறது.

இம்முறை இந்த விருது விழா கனடா டொரன்டோவில் The Estate Banquet and Event Centre மண்டபத்தில் கடந்த 04 ஆம் திகதி நடந்தது.

பெருந்திரளானோர் கலந்துகொண்ட இவ்விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் இலக்கிய ஆர்வலர் அறிஞர் தோமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மாவும், பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியையுமான கிம் எச்லினும் விசேட விருந்தினராக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மனுவேல் ஜேசுதாசன், காப்பாளர் அருட்திரு சந்திரசாசன் ஆகியோரின் உரைகளையடுத்து விருதாளர்கள் பற்றிய அறிமுகத்துடன் விருதுகள் வழங்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதினை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலக்கிய படைப்பாளியும் தற்போது அவுஸ்திரேலியாவில் வதிபவருமான எழுத்தாளர் லெ. முருகபூபதியும், இந்தியாவில் பெங்களுரில் வதியும் பிரபல எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் பாவண்ணனும் பெற்றார்கள்.

புனைவு எழுத்துக்கான விருது ‘மன்னார் பொழுதுகள்’ நாவல் எழுதிய வேல்முருகன் இளங்கோவுக்கும் அபுனைவு விருதுக்கு ‘மூவந்தியில் சூலுறும் மர்மம்’ என்ற படைப்புக்காக சாம்ராஜுக்கும், கவிதைக்கான விருது கவிஞர் சுகிர்தராணிக்கும், இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் இலக்கியச் சாதனைக்கான விருது கனடாவிலிருந்து நீண்டகாலமாக பதிவுகள் இணைய இதழை நடத்திவரும் வ.ந.கிரிதரனுக்கும் வழங்கப்பட்டது.

 

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.