பிரபல சமையல் நிகழ்ச்சி நடுவர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர்செப் ஆஸ்திரேலியா’. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நடுவராக இருந்தவர் ஜோக் ஜென்ப்ரிலொ (வயது 46).

ஸ்காட்லாந்து நாட்டின் கிலாஸ்கோவில் பிறந்த ஜோக் ஜென்பிர்லொ ‘மாஸ்டர் செப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில், ஜோக் ஜென்பிர்லொ நேற்று திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோக் ஜென்பிர்லொவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button