உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 61 சதவீதம், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் 55 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மெலோனி 49 சதவீதம், 5-வது இடத்தில் பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா 49 சதவீதத்துடன் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீதத்துடன் 6வது இடத்தில் நீடிக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் 34 சதவீத ஆதரவுடன் 10-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button