உலகச் சாதனை புரிய எரிமலையின் உச்சியில் தங்கும் பெண்
பெர்லா திஜெரினா (Perla Tijerina) உலகச் சாதனை புரிவதற்காக எரிமலையின் உச்சியில் தங்கியுள்ளார்.
அவர் ஒரு மாதத்திற்கு மெக்சிகோவின் ஆக உயரமான மலையான பிகொ ட ஒரிசபாவில் (Pico de Orizaba) தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.
மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா அடிக்கடி அவரது Instagram பக்கத்தில் அவரது தீரச்செயலைப் பதிவுசெய்து வருவதாக The Independent கூறியது.
“எனது மனோதிடத்தை உறுதிசெய்ய விரும்புகிறேன். அதோடு பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன். எந்தச் சிக்கல் வந்தாலும் மனம் தளரக்கூடாது,” என கங்கணம் கட்டிக்கொண்டு அவர் செயல்படுகிறார்.
அந்தச் சாகசத்தை மேற்கொள்வதற்கு முன்னர் பெர்லா பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதாக The Independent தெரிவித்தது.
![]()