ஓர் ஆண்டில் 6 லட்சம் ரூபாயை (சுமார் $10,000) இட்லி வாங்கச் செலவிட்ட இந்தியர்
இந்தியாவில் இயங்கிவரும் உணவு விநியோகச் சேவையான Swiggy, நேற்று முன்தினம் (30 மார்ச்) அனுசரிக்கப்பட்ட உலக இட்லி தினத்தை முன்னிட்டு பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டது.
இட்லி எவ்வளவு பிரபலமான உணவாக இருந்திருக்கிறது என்பதை அது சுட்டியது.
கடந்த ஓர் ஆண்டில் 33 மில்லியன் முறை இட்லியை விநியோகம் செய்துள்ளதாக அது கூறியது.
குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் 8,428 முறை இட்லியை வாங்கியுள்ளார்.
NDTV செய்தி நிறுவனம் அது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
ஓர் ஆண்டில் மொத்தம் 6 லட்சம் ரூபாயை (சுமார் 10,000 சிங்கப்பூர் வெள்ளி) இட்லி வாங்கச் செலவிட்டுள்ளார் அவர்.
தமக்கு மட்டுமல்லாமல், தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இட்லியை வாங்கித் தந்திருக்கிறார்.
அவர் பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோதும் இட்லியை Swiggy செயலி வழி வாங்கியதாக NDTV தெரிவித்தது.
இருப்பினும் மசாலா தோசை இந்தியாவில் காலை உணவாக அதிக முறை விநியோகிக்கப்பட்ட உணவாக இருப்பதாய் Swiggy நிறுவனம் சொன்னது. இட்லிக்கு இரண்டாவது இடம்.
![]()