Vogue சஞ்சிகையின் அட்டையில் தோன்றியிருக்கும் 106 வயதுப் பெண் கலைஞர்!

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 106 வயதுப் பெண் Vogue சஞ்சிகையின் அட்டையில் தோன்றி சாதனை படைத்துள்ளார்.

சஞ்சிகையின் முன்பக்கத்தில் தோன்றியிருக்கும் ஆக வயதானவர் அவர்.

130 ஆண்டுகள் பழமையான Vogue, ஆடை அலங்காரம், கலைகள், கலைஞர்கள், வாழ்வியல் அம்சங்களைப் பதிப்பிக்கும் உலகின் பிரபல மாத சஞ்சிகை.

மரியா ஒகேய் (Maria Oggay) என்றழைக்கப்படும் வாங்-ஓட் (Whang-Od) பச்சை குத்தும் (hand-tapping tattoos) கலையைத் தமது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவர்… அவர் இப்போதுவரை பச்சை குத்தி விடுகிறார்.

பதின்மவயதுப் பருவத்தில் அந்தக் கலையைக் கற்றுக்கொண்ட அவர், பிலிப்பீன்ஸின் கலிங்கா வகைப் பாரம்பரியப் பச்சை குத்தும் கலைஞர்களில் ஆக வயதானவர்.

வாங் ஓட் அதனைத் தமது பேத்திகளுக்குக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்.

“என் கலை என்னோடு முடிந்துவிடும் என்ற பயம் இல்லை… அடுத்த தலைமுறைக்கு இப்போதே பயிற்சியளிக்கிறேன்!”

என்று அவர் CNN செய்தியிடம் கூறினார்.

பிலிப்பீஸில் உள்ள Vogue சஞ்சிகையின் தலைமைச் செய்தியாசிரியர் அவரது படத்தை சஞ்சிகையின் அட்டையில் போடத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?

“பிலிப்பீன்ஸ் கலாசாரத்தின் அழகை அவர் பிரதிநிதிக்கிறார். அழகு என்றால் என்ன? அதுபற்றி மக்கள் நினைப்பது மாறவேண்டும்.மனிதர்கள் வெவ்வேறு வடிவங்களில் அழகைக் காணத் தெரிந்துகொள்ளவேண்டும்,”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button