தனுஷ்,ஐஸ்வர்யா விவாகரத்து கோரி மனு தாக்கலா…! விமர்சகர் டுவிட்டால் பரபரப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சில மாதங்கலாக கசிந்து வருகிறது. தற்போது தனுஷ் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக டுவிட்டர் பிரபலமும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து தெரிவித்துள்ளார். உமைர் சந்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் தனுஷ் என தெரிவித்துள்ளார். விவாகரத்து செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இருவருக்குள்ளும் சில சமரச பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இதனால் இருவரும் தங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது இதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தனுஷ் ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக ஏமாற்றியதாக டுவிட்டர் பிரபலம் உமர் சந்து கூறியுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

உமைர் சந்துவின் டுவீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நீங்களே ஒரு டுபாகூர். நீங்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது. நீங்க மட்டும் கையில கெடச்சீங்க, அவ்வளவு தான். நாங்கள் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளோம் என தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சொல்லும் வரை நம்ப மாட்டோம். தனுஷ் பெயரை கெடுக்கவே இப்படி அவர் மீது பழி போடுகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கேப்டன் மில்லர் மற்றும் வடசென்னை 2 படங்களிலும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். திருவண்ணாமலையில் மார்ச் 7ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button