அதிக நேரம் தூங்கினால் நிறையப் புள்ளிகள்… நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லும் புதிய Pokemon விளையாட்டு
Pokemon Go” திறன்பேசி விளையாட்டில் கதாபாத்திரங்களைப் பிடிக்கப் பலரும் ஓடோடி அலைந்தனர்.
அதனால் அதன் அடுத்த விளையாட்டில் இப்போது அனைவருக்கும் ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பு…
அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு “Pokemon Sleep” என்ற அந்த விளையாட்டு வரும் கோடைக்காலத்தில் பெரும்பாலான நாடுகளில் வெளியாகவுள்ளது.
அந்த விளையாட்டு தூக்கத்தையும் கேளிக்கையாக மாற்றவுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
Pokemon கதாபாத்திரங்கள் எப்படித் தூங்குகின்றன என்பதை ஆராய்ச்சி செய்வதே அது…
அதிக நேரம் தூங்கினால்… காலையில் அதிகப் புள்ளிகள் கிடைக்கும்… அதிகமான கதாபாத்திரங்களும் திரையில் தோன்றும்…
அதனால் விளையாட்டாளர்கள் நன்கு ஓய்வெடுப்பது முக்கியம் என்கிறது நிறுவனம்.
விளையாட்டாளர்களின் தூக்கத்தைக் கண்காணிக்கும் அம்சம் விளையாட்டில் இணைக்கப்பட்டிருக்கும்.
![]()