இலக்கியச்சோலை

திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு!… ஏலையா க.முருகதாசன்.

திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு,

வணக்கம்!…. ஏலையா க.முருகதாசன்.

திரு.பிரபாகரன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் செய்தி தொடர்பாக தங்கள் கருத்தினை ஒரு காணொளி வாயிலாக வெளியிட்டிருந்தீர்கள்.அதனை தங்கள் முகநூலில் கண்டுபிடிக்க முடியவில்லை.

பழ .நெடுமாறனோ அல்லது காசி.ஆனந்தனோ இந்திய உளவுத்துறையின் ஆட்கள் என்பதில் சந்தேகமில்லை.விடுதலைப்பலிகளைக் கொண்டாடும் எவர் தமிழ் நாட்டில் இருந்தாலும் அவர்களை இந்திய உளவுப்படை தமது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துவிடும்.

பொதுமக்களைத் தவிர்த்து ,விடுதலைப்புலிகளைப் பற்றிப் புகழ்ந்து பிரசாரம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் உளவுப் படையினர் விசாரிப்பார்கள் அதில் தவறு எதுவுமில்லை. ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்புக்காக கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய பொறுப்பு இந்திய உளவப் படைக்கு உண்டு.;.சட்ட ரீதியாக குறிப்பாக இந்தியச் சட்டத்திற்கு எதிராக பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்தால் சில எதிர்வினைகளை நீங்கள் சந்திக்க வேண்டிவரும் என்று பயமுறுத்தாத ஆலோசனை போன்று சொல்லியிருப்பார்கள்.உளவுப் பிரிவகளின் நiடைமுறைகளில் இதுவும் ஒன்று.

இது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஒரு எச்சரிக்கை.கடந்த காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது..திரு.காசி ஆனந்தனின் சகோதரர் திரு.கா.சிவநாதன் வெளிநாடொன்றில் இருக்கிறார்.இவர் தன் அண்ணனைச் சந்திப்பதற்காக தமிழகம் போன போது அவர் தொலைபேசியில் திரு.காசி ஆனந்தனுடன் தொடர்பு கொண்டது தொடங்கி அவரின் நடமாட்டத்தை உளவு பார்த்த உளவுத்துறை அவரை விசாரணைக்கழைத்து ‘காசி ஆனந்தன் வந்த போது ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டார் நீங்கள் யாரைக் கொலை செய்ய வந்திருக்கிறீர்கள் ‘ என்று கேட்டிருக்கிறார்கள்.

இதிலிருந்தே திரு.காசி ஆனந்தனோ திரு.பழ.நெடுமாறனோ இந்திய உளவுத் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகிறது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றது.13வது விதிப் பிரகாரம் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்படக்கூடிய காவல்துறை காணி அதிகாரங்களைக் கொடுப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது.பௌத்த குருமாரும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று

சொல்ல வைப்பதன் மூலம் சிங்கள மக்களையும் அரசையும் யோசிக்க வைத்து 13வது விதியை நடைமுறைப்படுத்துவதற்காக பழ.நெடுமாறனைக் கொண்டு காசி.ஆனந்தனை அருகிருக்க இந்திய உளவுத்துறை சொல்ல வைத்திருக்கலாம்.

இந்திய ரூபாயின் சிம்போலில் இயூரோ பணச் சிம்போலிருப்பது போன்ற இரண்டு சமாந்தரக் குறியீடுகள் உண்டு.இது ஸ்த்திரத் தன்மைக் குறியீடுகளாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இயூரோ பணப் புழக்கம் இருப்பது போல இந்திய ரூபாயும்,அயல் நாடுகளில் புழக்கத்துக்கு கொண்டு வருவதுடன் அந்நாடுகள் இந்திய ரூபாயை தமது பணமாக ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை காலப் போக்கிலஇ உருவாகலாம்.

அதன் முதல்படியாக இந்திய ரூபாயையும் இலங்கை அரசு புழக்கத்துக்கு கொண்டு வருதலை ஏற்றுக் கொள்ள வைத்து பின்னர் இலங்கை ரூபாயை வலுவிழக்கச் செய்வதும் இந்தியாவின் திட்டமாகலாம்.

இந்திய ரூபாயின் இன்றைய நிலை தேவநாகரி என்ற ஆதிகால பணத்தின் வலுவைக் குறிக்கின்றது இது கடவுளின் பணமாகவும் „தேவ’ என்பது நரகத்தையும்,’நாக’ என்பது நரகத்தையும் குறிப்பதாகும்.

சேதுசமுத்திரத்: திட்டம்,எதிர்காலத்தில் இராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குக் கீழால் தலைமன்னாருக்கு பாலம் அமைக்கும் திட்டம்,வெகு சீக்கரத்தில் காங்கேசன்துறை,கொழும்பு போன்ற துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து போன்றவையை ஏற்படுத்துதல் என்பனவாகும்.பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய்க்கு கீழால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை நெப்போலியன் காலத்திலேயே யோசிக்கப்பட்டதாகும்.

இந்தியா தமது செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் இலங்கையை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

அதற்கான தந்திரமே திரு.பழ.நெடுமாறனால் சொல்லப்பட்ட திரு.பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்ற அறிக்கைச் செய்தியாகவும் இருக்கலாம்.

தங்களுக்கும் இது நன்றாகவே தெரியும்.ஏனெனில் தாங்கள் மிகவும் விஞ்ஞான அணுகுமுறை நுட்பத் தன்மை உள்ள ஊடகவியலாளர் என்பது பலருக்கும் தெரியும்.எனது இந்தக் கருத்து ஒரு பொதுப் பார்வையாகும்.எவருக்கும் சார்பானதல்ல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.