விந்தணுவும் கைத்தொலைபேசியும்!…. ஏலையா க.முருகதாசன்.
![]()
நாளுக்கு நாள் விஞ்ஞான உலகம் வியத்தகு கருவிகளை உருவாக்கி வருகிறது.
இயற்கையுடன் சவால்விடும் அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விஞ்ஞானிகள் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
மனிதனுடைய வாழ்க்கை இனி அவனுடைய சிந்தனைக்குட்பட்ட வழித்தடத்தில் போகும் காலமாக இருக்காது.
அவன் கண்டு பிடித்த கருவிகள் அவனை நூலில் ஆடும் பாவையாக்கப் போகின்றது.விஞ்ஞானக் கருவிகளால் அவன் ஆட்டிப் படைக்கப் போகின்றான்.
மனிதகுலத்தின் நலன் நோக்காது கண்டுபிடிப்பவர்களின் மீதான வெறிகளும், ஆராய்ச்சிகளும் ஒரு காலத்தில் மனித குலத்துக்குள் மனித பிரளயத்தையே ஏற்படுத்தப போகின்றது என்பது திட்டவட்டமாகவே தெரிகிறது.
மனிதர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் „நான் யாருக்கும் அடிமை இல்லை’ நான் யாரிலும் தங்கியிருக்கவில்லை’ எனது இரகசியங்களை எவராலுமே அறிந்து கொள்ள இயலாது’ என்பதெல்லாம் இனி ஒரு போதுமே உண்மையாகாது.இனிவருங்காலத்தில் மனிதர்களிடத்தில் எந்த இரகசியமும் இருகசியமாக இருக்காது.
மனிதர்களின் உடல் சார்ந்தும்,மனம் சார்ந்தும் அறிந்து கொள்ள வைக்கின்ற அனைத்துக் கருவிகளின் மொத்தத் திரண்டுத்தான் நாம் வைத்திருக்கும் கைத்தொலைபேசிகள்.
காலத்துக்க காலம் கைத்தொலைபேசித் தயாரிப்பாளர்கள் புதிய புதிய தகவல்கள் அடங்கிய கைத்தொலைபேசிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவை எமக்கு வரப்பிரசாதம் என நாம் நினைத்துக் கொண்டு போட்டி போட்டி அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்றால் அதன் பொருள் பரிசோனைக் கூடத்து எலிக்குச் சமனாக எம்மை கைத்தொலைபேசி ஊடக விஞ்ஞானிகள் வசம் எம் உடலையும் மனதையும் ஆராய அடகு வைத்துள்ளோம் என்பதே உண்மையாகும்.
எமது பெருவிரல் அடையாளத்தை பதிந்தால்தான் கைத்தொலைபேசி திறக்குமென்ற நிலையில் அதற்கூடாக எமது உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளையும்,அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முழு உரிமையையும், வேதியல் பொருட்களினால் உருவாக்கப்பட்ட எமது உடலின் வேதியல் பொருட்களின் அளவுகளை மாற்றியமைப்பதன் மூலம் எமது உடலை நோய்க்குள்ளாக்கும் தீமைக்கு நாம் கைத்தொலைபேசி என்ற உறுதிப்பத்திரத்தை இவை அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் வைத்திருக்கும் ஒரு குழுமத்திடம் கொடுத்துவிட்டோம்.
நாம் நடக்கும் பொது எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதையம் எமது இருதயத்தின் செயல்பாட்டிடும் தொலைபேசி எம்மிடம் இருக்குமானால் அது ஒரு மருத்துவர் எம்மை பரிசோதித்தறிவதற்குச் சமனாகின்றது.
எமது உடல் மின் காந்த அலைகள் என்ற வலையால் சூழப்பட்ட உடலாக மாறிவிட்டது.இன்னும் குறிப்பாக ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்,ஆண்கள் தமது கைத் தொலைபேசியை தமது காற்சட்டைப் பைக்குள் எப்பொழுதும் வைத்திருப்பார்களானால் அவர்களின்: விதைப்பையில் இருக்கும் விந்தணுக்கள் சிதைந்து பலமிலந்தவையாக ஆகிவிடுவது மட்டுமல்ல நிறைவான காம உணர்ச்சியை அவர்களால் பெற முடியாத அவல நிலை தோன்றவும் வாய்ப்புண்டு.
இதன் பாதிப்பை ஆண்கள் காலஞ் செல்லவே உணர்ந்து கொள்வார்கள்.அன்றைய மனிதர்களிடத்தில் விஞ்ஞானக் கருவிகள் எதுவும் இல்லை.இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள்.இயற்கையோடிணைந்த, அதன் சூழலை ஏற்றுக் கொண்டும் அதனோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்த காலத்தில்,அவர்கள் தொழிலாளிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்த காரணத்தினால் உடல் உழைப்பின் காரணமாக அவர்கள் உடலிருந்த கழிவுகள் தாமகவே வெளிNறின.
அதனால் சுத்தமான இரத்தம் அவர்களின் உடலில் இருந்தது.அதன் காரணத்தால் அவர்கள் தமது தாம்பத்தியு உறவில் அல்லது உடலுறவில் முழுமையான திருப்தியடைந்தது மட்டுமல்ல சிலர் 75 வயதிலிருந்து 80 வயதுவரைகூட பிள்ளைகபை; பெற்றுக் கொள்ளக்கூடிய வலுவிலிருந்தார்கள்.
காம உணர்வில் திருப்தியின்மை ஏற்படும் போது வெளியே சொல்ல முடியாத மன அழுத்தம், வெட்கம் அதனால் நிம்மதியின்மை போன்றவை ஏற்படுவதும் உண்டு.
பெண்கள், தமது கைத்தொலைபேசிகளை தமது கைப்பைகளுக்குள் வைத்திருப்பதால் அவர்களுக்கு ஆண்களைப் போல கருமுட்டைச் சிதைவோ வலுவின்மையோ ஏற்பட வாய்ப்பில்லை என்ற போதிலும்,கைப்பையை அவர்கள் தமது உடலோடு தொங்கவிடும் போது அவர்களின் உடலைச் சுற்றியும் மின் காந்தவலயம் இருக்கவே செய்யும்.
தனது அடுத்தடுத்த பரம்பரையை உருவாக்கக்கூடிய இனவிருத்தியும் அதன் மரபணுவை உள்ளடக்கியுள்ள உயிரணுவான விந்தணுவை பலவீனப்படுத்தாமலிருப்பதில் ஆண்களும் பெண்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனது பரம்பரையை உருவாக்கின்ற விருப்பத்தை இன்பத்தின் மூலமாகக் கொடுக்கின்ற காம உணர்ச்சி பேசத்தகாத விடயம் என்றோ,அருவருக்கத் தக்க விடயம் என்றோ தவறாக எண்ண வேண்டியதில்லை.வக்கிர வார்த்தைகளைப் பயன்படுத்தாது மிகவும் கண்ணியமாகவும் நாகரீகமாகவும் ஆய்வுக் கண்ணோக்கில் பேசலாம்,சிந்திக்கலாம்.
![]()