மனித குலத்திடம்; இனி இரகசியங்கள் இரகசியங்களாக இருக்காது!… ஏலையா க.முருகதாசன்.

முழு உலகத்தையும் இடைவிடாது கண்காணித்துக் கொண்டிருப்பது பூமியைச் சுற்றி மிதந்து கொண்டிருக்கும் சட்லைற்றுக்களாகும்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியை ஆதியிலிருந்து கவனித்து வருகையில் மனித குலத்தின் வேகமான அறிவுப் பாய்ச்சலை உணர முடியும்.
மனிதகுலத்திற்கு நன்மை கொடுக்கக்கூடியவை எனக் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் இன்றைய நவீன கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுகின்ற சட்லைட்டுகளும், தொடர்நிலைக் கண்டு பிடிப்புகளினால் மேம்படுத்தப்பட்ட கமராக்களும் இன்னும் விஸ்வரூபம் எடுக்கப் போகின்றன என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றன.
விஞ்ஞானிகள் ஒரு பக்கம் புதிய புதிய கருவிகளைக் கண்டு பிடிக்கக் கண்டு பிடிக்க அதை பற்றி ஏன் எதற்கு என்று அவ்விஞ்ஞானக் கருவிகளினால் ஏற்படப் போகும் மனித பிரளயங்கள் பற்றி தூர நோக்குடன் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் இவையெல்லாம் விஞ்ஞானத்தின் மூலம் சாத்தியப்படுமா என்று எள்ளிநகையாடிய போதும்,புதுமைகள் சார்ந்த கற்பனைக் கதைகளை வாசித்த போதும் கற்பனைகள் யாவும் எதிர்காலத்தில் அவற்றை ஐம்புலன்கள் வழியாக அறிவோம் கேட்போம் பார்ப்போம் உணர்வோம் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும் சட்லைட்டுகள் பூமியை மட்டுமல்ல பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தையும் கோள்களையும் அளக்கவும் நோட்டம் விடவும் தொடங்கிவிட்டன.
பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களின் பரிமாணத்தையும் நீர்நிலைகளின் ஆழங்களையும் அங்கிருக்கும் இரகசியங்களையும்,பூமியின் மத்தியிலிருக்கும் கரு என்று சொல்லுகின்ற கொதிநிலைத் தீக்குழம்பின் வெப்பநிலையின் அளவு எவ்வளவு என்பதையும் அச்சொட்டாக சொல்லுமளவிற்கு சட்லைட்டுகளின் வளர்ச்சி விசுவரூபnடுத்து வருகின்றது.
பூமித்தரையில் இருக்கும் கடுகிலும் சிறிய பொருளைக்கூடப் படம் பிடிக்கும் சட்லைட்டுகள் இதுவரையில்லாத புதுமையென்றும் சொல்ல முடியாத மனித பிரளயத்தை ஏற்படுத்தப் போகும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
மனிதர்கள் பூமியிலிருந்து தமக்குள் உரையாடும் உரையாடலை உள்வாங்கிக் கொளு;ளும் கண்ணால் பார்க்க முடியாத ஒலி ஒளிக்கதிர்களை மனதர்களை நோக்கிச் செலுத்தி அவை உரையாடும் மனிதர்களின் வாயசைவை அண்மித்தவுடன் ஒளிக் கதிர்கள் ஒலி உறிஞ்சும் ஒலிவாங்கிக் கதிர்களாகச் செயல்பட்டு அவற்றை சட்லைட்டுக்கு அனுப்பிவிடும்.
இதுவரை காலமும் வீடியோக் கமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருக்கும் ஒலிகளையே பதிவு செய்து வந்தது.ஆனால்
இனிவருங்காலங்களில் மிகச் சக்திவாய்ந்த லென்ஸ்கள் ஒரு கிலோ தூரத்தக்கப்பாலும் உள்ள மனதர்களைப் படம் பிடிக்கும் போது அவர்களின் உரையடலையும் பதிவு செய்யும் கண்ணுக்குத் தெரியாத மின்னணுக் கதிர்மூலம் உரையாடுபவரின் உரையாடலையும் ஒலிப்பதிவு செய்யம் ஆராய்ச்சிகள் நடைபெறு;றுநடந்து முடிந்து விட்டன.ஒரே இடத்தில் கூடியிருக்கும் பலமொழிகளைக் பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களின் உரையாடல்களையே பிரித்தெடுக்கும் பெரும் ஆற்றல் கொண்ட கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
ஏற்கனவே உளவு அமைப்புகள் உளவு பார்ப்பவர்களின் மூக்குக் கண்ணடியில் மிக நுண்ணிய கமாரக்களை பொருத்தி தமக்குத் தேவையான மனிதர்களையும் அவர்கள் உரையாடும் போது அவரகள்; கூறும் இரகசியங்களையும் பதிவு செய்வதும் உடனுக்குடனேயே அவ்வுரையாடலும்,அவ்வுரையாடலுக்குரிய மனிதர்களின் முகங்கள் சூழல் என்பன தானியங்கி நிலையில் உளவு அமைப்புகளின் தலையமைத்துக்கு போய்ச் சேர வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை அமெரிக்கா,இஸ்ரேல்,ஜேர்மனி போன்ற நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
உல்லாசப் பயணிகளாக வரும் உளவு அமைப்பாளர்கள் பல நாடுகளின் இரகசியங்களைத் திருடிச் செல்வது நீண்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உளவுச் செயலாகும்.நவீன கமராக்கள் மூலம் இன்னும் இவை இலகுவாகப் போகின்றன.
ஏற்கனவே கணிணிக்கூடாகவும் இயங்காது நிலயிலிருக்கும் கைத்தொலைபேசிக்கூடாகவும் ஆவணங்களும்,உரையாடல்களும் திருடப்பட்டுக் கொண்டும் வேவுபார்க்கப்பட்டும் வருகின்றன.
இவை திருடப்படுவதற்கு கணிணி மென்பொருள் உற்பத்தியாளர்களும் கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களும் வேறொரு குழுவினரைச் குற்றம் சாட்டினாலும்,இவ்வுற்பத்தியாளர்களின் இன்னொரு பகுதியினரே குற்றம் சாட்டப்படுபவர்கள்.
எமது இரகசியங்கள் யாருக்கும் தெரியாது வெளியே கசியாது என எண்ணிக் கொள்பவர்கள் தமது உரையாடல்களை அவர்களின் கணிணி வழியாகவும் கைத்தொலைபேசி வழியாகவும் ஒரு குழு கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதிருக்கின்றனர்.
இனி இரகசியங்கள் என்று வெளிவராத இரகசியங்கள் எதுவுமே மனித குலத்திடம் இருக்காது.
![]()