இந்தியாவில் முதல்முறையாக திருநங்கை தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஜியா பாவல் ஜஹாத் திருநங்கை தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவல் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளார். ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது. திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுதான்முதல் முறை” என பதிவிட்டி ருந்தார்.

இந்நிலையில் திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. திருநங்கைக்கு குழந்தை பிறந்தது  இந்தியாவில்இதுதான் முதல் முறை ஆகும்.

இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறும்போது “ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளனர். என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button