9 வயதில் எழுதத் தொடங்கிய புத்தகம்… 30 வயதில் முடித்திருக்கிறார்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றியும் கலைக் களஞ்சியம் ஒன்றை எழுதப்போவதாக ஜோஷ் கப்பாடிஸ் (Josh Gabbatiss) முடிவெடுத்தார்.

அப்போது அவருக்கு 9 வயது.

பிரிட்டனைச் சேர்ந்த அவருக்கு இப்போது 30 வயது.

2001ஆம் ஆண்டு தொடங்கி, இப்போது கலைக் களஞ்சியத்தை எழுதி முடித்திருக்கிறார்.

அந்த 118 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் உயிரினங்கள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்று The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

புத்தகத்திற்காகத் தொடர்ந்து பாடுபட்டதாகக் கப்பாடிஸ் சொன்னார்.

பல்கலைக்கழக நாள்களின்போது எழுத்துவேலையை ஒத்திவைக்க வேண்டிய நிலை…

புத்தகத்தை எழுதுவதில் முழுமூச்சாக இறங்க COVID-19 முடக்கநிலை வாய்ப்பளித்ததாகக் கப்பாடிஸ் The Guardian-யிடம் தெரிவித்தார்.

பின்னர் புத்தக வேலை மீண்டும் ஒரு பக்கம் தள்ளி வைக்கப்பட்டது.

இறுதியாகச் சென்ற மாதம் தொடங்கிப் புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார்.

20 ஆண்டுப் புத்தகம் எழுதும் பயணம் முடிவுக்கு வந்தது.

அதைக் கலைக் களஞ்சியமாக வெளியிட யாருக்காவது விருப்பம் இருந்தால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு அவர் Twitter-இல் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button