அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில் 1,800 ஆண்கள் கைது

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிறுமிகளின் திருமணம் தொடர்பாக 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில முதலமைச்சர் ஹமின்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு இக்கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சிறுமிகளை திருமணம் செய்தமை அல்லது சிறுமிகளை திருமணத்துக்கு உதவியமை தொடர்பில் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் பிஸ்வா சர்மா  தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான இக்குற்றம் தொடர்பில் பூச்சியம் சகிப்புத்தன்மை கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும், அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர் என அவர் கூறினார்.

4,004 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button