நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சாதனையாளர் விருது…
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு, ‘பவர் காரிடார்ஸ் இந்திய சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது.
நடிகர் கமலின் மகளான ஸ்ருதி ஹாசன், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில், ஸ்ருதிக்கு, டில்லியில் உள்ள விஞ்ஞான பவனில், ‘பிசி’ எனப்படும் பவர் காரிடார்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.
இவ்விருது, பல்வேறு களங்களில் இருந்து, தேசத்திற்கு சேவை செய்ய முன்வந்த குடிமக்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஸ்ருதிஹாசன் கூறியதாவது:
இந்த விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்காக நான் நடுவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கலைப் பணிக்காக பாராட்டப்படுவது, எப்போதுமே பணிவானது. முக்கியமான விஷயங்களுக்கு, என் தளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றதற்கு, நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
![]()