தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர்…

இலங்கையில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழக் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் பெப்ரவரிப் மாதத்தில் தொழிற்சந்தை ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து வருகை தந்த முஸ்லிம் மீடியா போரத்தின் தூதுக்குழு, சென்னையில் உள்ள துணை உயர் ஸ்தானிகர் காரியாலத்திற்கு கடந்த 13 ஆம் திகதி வருகை தந்தனர். அவர்களுக்கு இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரன், அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இச்சந்திப்பின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் செயல்பாடுகள் குறித்து போரத்தின் முன்னாள் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் விளக்கி கூறினார். அதனைத் தொடர்ந்து துணை உயர் ஸ்தானிகர் குறிப்பிடுகையில், சென்னையில் உள்ள துணை தூதர் அலுவலகத்தில் தினமும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் பல்வேறு முகாமில் உள்ளவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ஆறு பேரை இலங்கைக்கு அனுப்பி வைத்தோம்.

கடந்த பல வருடங்களாக தமிழக முதல்வரை சந்திப்பதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. ஆனால் தற்போதய முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை மிகக் குறுகிய காலத்தில் பல தடவைகள் சந்திக்க முடிந்தது. எம் மக்கள் தமிழ்நாட்டின் சலுகைகளை எவ்வித கஷ்டமும் இன்றி பெற்றுக்கொள்ள இது வழிவகை செய்துள்ளது.

எவ்வாறாயினும் சென்னை துணை உயர் ஸ்தானிகராலயம் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு பிறப்புச்சான்றிதழ் உட்பட அம்மக்களுக்கு இடைக்கிடையே இலவச மருத்துவ முகாம்களையும் ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது.

சென்னையில் மாத்திரமன்றி ஏனைய மாநிலங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு இச்சேவை வழங்கப்படுகிறது. இது ஒரு கடினமான பணியாக இருந்தாலும் துணை உயர் ஸ்தானிகர் காரியாலயம் எவ்வித கட்டணமும் அறவிடாது அதனைச் செய்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக இலங்கையில் இருந்து வருகை தரும் மக்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

இதேவேளை தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பேசி நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது’ என்றும் கூறினார்.

இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் துணை தூதர் செயலாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button