தடுத்து நிறுத்தவே முடியாத ஏவுகணையைக் கொண்ட 2 ரஷ்ய கப்பல் பிரிட்டன் கடலில்!
ரஷ்யாவின் அதிநவீன 2 போர்க் கப்பல்கள் பிரித்தானியக் கடல் எல்லை ஊடாக கருங்கடல் நோக்கிப் பயணித்துள்ளது. இந்த கப்பல்களில் ஹைப்பர் சோனிக் அணு குண்டு ஏவுகணைகள் உள்ளது. குறித்த ஏவுகணையை ஏவினால். அது முதலில் விண்வெளி நோக்கிச் சென்று. விண்வெளியிலிருந்து செங்குத்தாக வந்து குறித்த நாட்டில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தவே முடியாது. அமெரிக்காவிடம் கூட இதனைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட எதிர் ஏவுகணைகள் இல்லை.
இந்த 2 ரஷ்ய கப்பலும் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பயணிக்க, பிரித்தானியாவிடம் அனுமதி கோரியது. இதனை அடுத்து அதற்கான அனுமதியை வழங்கிய பிரித்தானியப் பாதுகாப்புத்துறை, தனது அதிநவீன போர்க் கப்பல் ஒன்றைச் சொந்த பாதுகாப்புக்காக அனுப்பி இருந்தது. பிரித்தானியப் போர்க் கப்பலின் வழிகாட்டலில், அந்த 2 ரஷ்ய கப்பலும் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து கருங்கடல் நோக்கிச் செல்லும் காட்சி இதோ…
இந்த ரஷ்யப் போர்க் கப்பல் கடந்து செல்ல பிரித்தானிய அனுமதி கொடுத்தது தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியடைந்துள்ளது. இருப்பினும் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய இந்த கப்பல்கள் பயணிக்க பிரித்தானிய அனுமதித்துள்ளது.
![]()