கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!….. தொடர்ச்சி 37….. மௌனஅவதானி.

உலக நாடுகளை உளவு நிறுவனங்கள் கையாளுகின்ற பொதுவான அணுகுமுறையை கடந்த பகுதிகளில் பார்த்தோம்.

அவ்வணுகுமுறைகள் யாவும் ஒவ்வொரு நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பைச் சார்ந்தும்,அந்தந்த நாட்டு மக்களின் குணாம்சங்களைச் சார்ந்தும்,ஆட்சி நிர்வாகத்தின் வலு, வலுவின்மையைப் பொறுத்தும் வித்தியாசப்படும்.

ஆசியப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவை எடுத்துக் கொண்டு அதனுடைய கடந்தகால அரசியல், பொருளாதார உறுதிநிலைத் தன்மையையும் இன்றைய அரசியல் பொருளாதார தளர்நிலைத் தன்மையையும் கவனத்தில் எடுத்து ஒப்பிடுகையில் „ஏன் இப்படி இலங்கை ஆயிற்று’ என்ற கேள்விக்கூடாகப் பார்க்கையில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளால் உளவு நிறுவனங்கள் வழியாக இலங்கை கையாளப்பட்டிருப்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவதானிகளால் கண்டறிய முடிகின்றது.

பொதுவாக இலங்கையின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தொகையையும் அவர்களுக்குத் தேவையான வளமும் அதனை நிர்வகிக்கும் ஆளுமையும் அதன் மூலம் இலங்கை மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருக்கக்கூடிய பொருளாதார வளமும் அப்பொருளாதார வளத்தைப் பயன்படுத்துகின்ற பொறிமுறைகளிருந்தும் இலங்கை ஏன் இலங்கை சறுக்குமரத்தில் ஏறுகின்ற நிலைக்கொப்ப சறுக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளும் போது இலங்கையை வெளிநாடுகள் தமது நலனுக்காக மிக நீண்ட பல பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கையாளத் தொடங்கிவிட்டன என்பது தெளிவாகிவிட்டது.

இலங்கையில் இரு இனங்கள் இருப்பதும்,பெருபான்மை இனம் சிறுபான்மை இனம் என்ற பேதத்துடன் சமனற்ற உரிமை நிலையை ஆட்சி நடத்துபவர்கள் பேணுவதால் சிறுபான்மையினமான தமிழர்கள் கவலைப்படுவதும் தமது உரிமைக்காக தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிள் மூலமாக அரசிடம் வேண்டுகோள் விடுவதும் அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதையும் கவனிக்கும் சாதாரண மக்கள் இது இலங்கை அரசு வேண்டுமென்றே தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகத்தான் நினைப்பார்கள்.

ஆனால் அரசை நடத்தும் பெரும்பான்மையினர் தமிழர்களின் பிர்ச்சினைகளை உணர்ந்து அதற்கான தீர்வை முன்னெடுத்து தமிழர் தரப்புடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அதன் தலைவரும்,சிறீலங்கா கட்சி சார்பாக அதன் தலைவரும் எதிர்ப்புத் தெரிவித்தமையால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை யாருமே மறக்கமாட்டார்கள்.

ஓப்பந்தங்கள் கிழிக்கப்பட்டதற்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் யார்?, அல்லது அந்த நாடு எது?, தமிழர்களுக்கு எதிராக இனவாத விசத்தை கக்க வைத்த சூத்திரதாரிகள் யார் என்பதை மிக நுட்பத்துடன் சம்பவங்கள் மீது ஏன் எப்படி என்ற வினாக்களைத் தொடுத்துக் கொண்டு செல்கையில் இலங்கைத் தமிழர்களுக்குத் தெளிவாக விளங்குவது இத்தனைக்கும் காரணம், இலங்கையைச் சீர்குலைத்து அதனை பலவீனப்படுத்தி வைத்திருப்பதற்கு இந்தியாவின் உளவு நிறுவனமான றோதான் என்பது புரியும்.

ஒரு நாட்டினுடைய உறுதித் தன்மை அதன் பொருளாதாரத்திலேயே தங்கி உள்ளது.அதனைச் சீரழிப்பதற்கு முதலில் அந்த நாட்டினுடைய தேவையற்ற செலவீனங்களை அதிகரிக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களும் இருப்பதே இந்தியாவுக்கு அனுகூலமாகிவிட்டது.இந்தக் கட்டுரையின் ஆரம்ப பகுதிகளில் பலம் பொருந்திய உளவு நிறுவனங்களாக அமெரிக்காவின் சிஐஏ,இந்தியாவின் றோ,ரஸ்யாவின் வெளிநாட்டுக்கான மதிநுட்பவியலாளர் பிரிவு,இஸ்ரேலின் மொசாட் என்பவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்.

இக்கட்டுரைத் தொடர்களில் நாடுகளில் இருக்கும் தூதரகங்களும் ஒரு நாட்டினுடைய அன்றாட நிர்வாக நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் உளவு வேலைகளையும் செய்கின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இலங்கையில் இன முரண்பாடுகளை எப்படித் தோற்றுவிப்பது என்பதை மிகத் தெளிவாகவே இந்தியா திட்டமிட்டது.பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது,திணைக்களங்களில் தமிழர்களே அதிகாரிகளாக இருந்தார்கள்.

பிரித்தானியர் இலங்கையைவிட்டுப் போனதன் பின்னரும் அது தொடர்ந்தது.பெரும்பான்மையினத்திற்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக இருப்பதை ஒரு காலகட்டத்திற்கு பின் பெரும்பான்மையினர் எதிர்க்கத் தொடங்குவது இயல்பானதே.

இந்தச் சூழ்நிலையை இலங்கையைச் சீரழிக்க இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது.இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் அத்தனையையும் தூண்டிவிட்டது இந்தியாதான் என்றால் பலராலும்; அது நம்ப முடியாததே.

இனக் கலவரங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை கூர்ந்து கவனித்தால் அதன் ஆரம்பம் சிறு பொறியாகவே இருக்கும்.கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல இந்திய தூதரகம் கட்சித் தலைமைகளுடனும் இனவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கையில் வணிகத்திலும்,அரசாங்க திணைக்களங்களிலும் தமிழர்களின் கை ஓங்கி வருவதை இயல்பாக சொல்வது போலச் சொல்வார்கள் அல்லது இரihஜதந்திரிகள் மட்டத்திலும் அது ஒரு அலூசனையாக ,அறிவுறுத்தலாகச் சொல்லப்படும்.

இந்தக் கலந்துரையாடல்களுக்கு இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் எவருமே நேரடியாக கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற போதிலும் றோவின் வழிநடத்திலில் தூதரகத்திற்கப்பால் ஒரு சில அதிகாரிகள் பயன்படுத்தப்படுவார்கள்.

இச்சந்திப்புகள் எதுவுமே தனிப்பட்ட சந்திப்புகளாகவும் நிகழ்ச்சிநிரல் அற்றவையாகவுமே இருக்கும்.இச்சந்திப்புகள் எதுவுமே பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவருவதில்லை.

இவை இரகசியமானவை.இச்சந்திப்புகளில் மதுவுடன் கூடிய விருந்தாகவும் சில வேளைகளில் சில கட்சித் தலைமைகளை தம்வசப்படுத்த பெண்களையும்; பயன்படுத்துவார்கள்.இது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.உளவு நிறுவனங்கள் அனைத்திலுமெ பெண்களைப் பயன்படுத்துவது மிகச் சாதாரண விடயமாகும்.

தமது திட்டத்தை நிறைவேற்ற உளவு நிறுவனங்கள் பணம், பொருள்,பெண் ஆகியவற்றை பயன்படுத்தத் தவறுவதில்லை.அதற்கு றோவும் விதிவிலக்கல்ல.

தூதரக முகவர்கள் அல்லது ஒற்றர்கள் இந்தியாவின் பெரும் வணிகர்களாகக்கூட இருப்பார்கள்.இவர்கள் வணிகத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கோ, கட்சித் தலைமைகளுக்கோ இனவாத விசம் கக்கும் அரசியல்வாதிகளுக்கோ நட்பு ரீதியாக விருந்தளிக்கும் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மிக இயல்பாக உரையாற்றுவது போல தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வார்கள்.இந்தியப் பெரும் வணிகர்கள் இலங்கையில் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இவர்களையும் ஒற்றர்களாக றோ பயன்படுத்தி வருகின்றது.

இது தமிழர்களுக்கு எதிரான மனநிலையை சிங்கள வணிகர்களிடத்திலும்,கட்சித் தலைமைகளிடத்திலும்,அமைச்சர்களிடத்திலும்,இனவாத அரசியல்வாதிகளிடத்திலும் தோற்றுவிக்கும்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறையை தோற்றுவிக்க, தமிழர் சிங்களவர் மத்தியில் தனிப்பட்ட சச்சரiவை உருவாக்கிவிடுவார்கள்.அது இன ரீதியான பகைமையாக வடிவமைக்கப்பட்டு ஊதிப் பெருப்பிக்கப்பட்டு ஏதோ ஒரு இடத்தில் தமிழர்களின் வீடுகள் கடைகள் சிங்கள மக்களால் சேதமாக்கப்பட்டும் எரிக்கப்பட அந்தச் செய்தி நாடடெங்கம் பரவ ஆங்காங்கே இனக்கலவரங்கள் ஆரம்பிக்கும்.இந்த இனக்கலவரம் காட்டுத் தீ போல பரவத் தொடங்கிவிடும்.

இனக்கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கும் சாதாரண சிங்களக் குடிமகனுக்கு ஏன் கலவரம் ஆரம்பித்தது என்று தெரியவே தெரியாது.சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்கள் செயல்படுகிறார்கள் என்ற செய்திமட்டுமே நாலாபுறத்திலுமிருந்து சிங்கள மக்களுக்கு எட்ட, தமிழர்கள் மீது கோபமும் வன்மமும் ஏற்பட்டு தமிழர்களைக் கொல்வதுடன் அவர்களின் உடமைகளுக்கு சேதமும் விளைவிப்பார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்கள் அத்தனைக்கும் காரணகர்த்தா இந்தியாவின் உளவு நிறுவனமான றோவேதான்.

இனக்கலவரங்கள்தான் தமிழர்கள் மீது சிங்களவர்களும்,சிங்களவர்கள் மீது தமிழர்களும் வன்மம் கொள்வதற்கான அடித்தளத்தை இட்டது.பிடிவாதமாக தமிழர்களின் உரிமை மறுப்புக்கும் அதுவே காரணம்.

இந்தியாவின் உளவு நிறுவனமான றோதான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டது.எடுப்பார் கைப்பிள்ளையான இலங்கையின் நிலைமைக்கு காரணமே றோதான்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *