நடுகைக்காரி!…. 47 …. ஏலையா க.முருகதாசன்.

![]()
வகுப்பாசிரியர் செல்லத்துரை மாஸ்ரர் போனதும்,அடுத்த வகுபபுத்; தொடங்குவதற்கிடையில் மாணவர்களும் மாணவிகளும் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்.
கடiசி வாங்கில் உட்கார்ந்திருந்த பாலசிஙகம் „ஞானம் பாவற்காய் சரி,புளியம்பழமும் சரி, அதென்ன மாஸ்ரர் பதமான இளநி உன்னட்டை கிடக்குது என்று; சொல்லிப் போட்டுப் போறார் அதுதான் எனக்கு விளங்கேலை „ என்று நக்கலாகக் கேட்க,அவன் உள் மனசிலை என்ன கள்ள எண்ணத்தை வைச்சுக் கொண்டு கேட்கிறான் என்பதை உணர்ந்த ஞானம் அவனுடைய நரித்தனத்தை உணர்ந்ததால்’ பாலா இது உனக்குத் தேவையில்லாத கதை, சேர் என்னோடைதான் கதைச்சவர், அது எனக்கும் அவருக்கும் உள்ள கதை,நீ இதிலை தலையிடத் தேவையில்லை, இப்படிக் கதைக்கிறது இதுதான் கடைசியும் முதலுமாக இருக்க வேணும் ‘ என்று ஆத்திரத்துடன் எழுந்து நின்று சத்தமாகச் சொன்னதும், ஞானம் சத்தமாக ஆத்திரத்துடன் பாலசிங்கம் பேசுவான் என்பதை எதிர்பார்க்காததால் வெலவெலத்துப் போய் அமைதியாகிறான்.
வகுப்பும் அமைதியாகிறது.ஞானம் இப்படிக் கதைப்பான் என்று புஸ்பகலா எதிர்பார்க்கவே இல்லை.ஞானத்தின் ஆத்திரத்துக்குக் காரணம் தன்னைச் சார்ந்ததுதான் என்பதை அவள் அறிவாள்.
பொதுவாக ஞானம் அமைதியானவன்.வகுப்பில் முசுபாத்திவிட்டுக் கலகலப்பாகக் கதைப்பவன்.இண்டைக்கு இப்படி ஆத்திரத்துடன் நடந்து கொள்கிறான் என்றாள் தன்னை எவ்வளவு ஆழமாகக் காதலிக்கிறான் என்று நினைத்தவள் ஞானத்தைத் திரும்பிப் பார்க்க அவனும் அவளைத் திரும்பிப் பார்க்கிறான்;.
அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் கசிந்திருப்பது தெரிந்தது.அது ஆத்திரக் கண்ணீர்.காய்ச்சலினால் அவன் முகம் வாடியிருந்து.கண்களும் சிவந்திருந்தது.
புஸ்பகலாவுக்கு ஞானத்துடன் உடனடியாகக் கதைக்க வேண்டும் போலத் தோன்றியது.அடுத்த வகுப்புத் துடங்குவதற்கு முன் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் கதைப்பதும் சில நேரங்களில் மாணவிகளுடன் கதைப்பதுமுண்டு.
வகுப்புகளில் ஆசிரியர் இருக்கிறார்களா இல்லையா என்பதை வகுப்புகளிலிருந்து சத்தம் வருவதிலேயே அறிந்து கொள்ளலாம்.ஆசிரியர்கள் வகுப்புகளில் இருந்தால் வகுப்புக்கள் அமைதியாக இருக்கும், ஆசிரியர்கள் வகுப்புக்களில் இல்லையென்றால் கலகலாவென்றிருக்கும்.
அதிபர் நடந்து வருவதைக் காணும் மாணவர்கள்,அமைதியாகி விடுவதுண்டு.
அதிபர் தமது வகுப்பை நோக்கி வருவதைக் கண்ட புஸ்பகலா „ ஏன் இப்படி அவனோடை சத்தம் போட்டனீங்கள்’ என்று கேட்க,’அவன் ஒரு நரியன் என்ன அர்த்தத்திலை கேட்டான் என்று தெரியுமோ,வெளிப்படையாகவோ உள்ளுக்குள்ளேயோ உங்களைப் பற்றி யாராவது கதைச்சால் பேசுவது மட்டுமல்ல அவைக்கு அடிப்பன்’ என்று ஞானம் சொன்னதும’பாலா என்ன அரத்;தத்திலை சொன்னவன் என்று எனக்கும் தெரியும்,காய்ச்சல் நல்லாய்க் காயுது போல மத்தியானத்துக்குப் பிறகு பள்ளிக்கூடம் வர வேண்டாம் „ என்று சொன்னவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.அதிபர் வருவதைக் கண்ட புஸ்பகலா முகத்தைத் திருப்பி அதிபர் வருவதைப் பார்க்கிறாள்
வகுப்பின் சிறு விறாந்தையில் கதவு நிலையோடு நின்று „ ஆற்றை பாடம் இப்ப „ என்று அதிபர் கேட்க,’பொன்னையா மாஸ்ரற்றை தமிழ் டபுள் பீரியட் சேர் என்று மொனிற்றர் தனபாலசிங்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ பொன்னையா மாஸ்ரர் வேகமாக வருவதைக் கண்ட அதிபர் படியால் கீழை இறங்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்.
வகுப்புக் கதவு நிலையோடு நின்று மாணவர்களிடம் ஏதோ விசாரித்ததைக் கண்ட பொன்னையா மாஸ்ரர் வகுப்புக்குள்ளை நுழைந்து ஒருமுறை வகுப்பை நோட்டம் விட்டதன் பின் „பிரின்சிபல் என்ன கேட்டவர் „என்று பொன்னையா மாஸ்ரர் பொதுவாகக் கேட்க,’வேறொன்றுமில்லை ஆற்றை வகுப்பென்று கேட்டவர் „ என்று ஒரு மாணவன் பதில் சொல்லுகிறான்.
„சரி, வாசிகசாலைகளினால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கட்டுரை எழுதிக் கொண்டுவரச் சொல்லியிருந்தேனே எழுதிக் கொண்டு வந்ததனீங்கள்தானே,ஞானம் நீ எழுதினதை வாசி பார்ப்பம் நீ நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறனி ஏதாவது புதுசா எழுதியிருப்பாய் வாசி „ என்று சொல்ல சோர்வாக எழுந்த ஞானம் இருமிக் கொண்டே கரகரத்த குரலில் மூக்குக் கனதியோட வாசிக்க’ பொன்னையா மாஸ்ரர் „ஞானம் நிற்பாட்டு உட்கார் உனக்கு என்ன சுகமில்லையா,சுகமில்லையெண்டால் ஏன் வந்தனி’ என்று சொல்லி முடிக்க முந்தி’ சேர் அவருக்குச் சரியான காய்ச்சல் அதோடை வந்திருக்கிறார்…’ என்று புஸ்பகலாவின் வாயிலிருந்து அவளை அறியாமலே வார்த்தைகள் வந்துவிடுகின்றன.
பொன்னையா மாஸ்ரர் ஓரிரு விநாடி அமைதியாகிறார்.பின் வாங்கிலிருந்த மாணவன் பொன்னையா மாஸ்ரருக்கு கேட்டும் கேளாத மாதிரி „அவன் அவனின்ரை ஆளைப் பார்க்காமல் இருக்க முடியாமல் வநதிருக்கிறான்,சிரட்டையிலை இஞ்சை வைச்சுத்தானே மருந்து உரைஞ்சிக் குடிச்சவன் „ என்று சொல்ல,கோபத்துடன் அந்த மாணவனைத் திரும்பிப் பார்க்கிறாள் புஸ்பகலா.
அந்த மாணவன் சொன்னது பொன்னையா மாஸ்ரருக்குக் கேட்டுவிடவே,சொன்ன அந்த மாணவனைப் பார்த்து’ நீ இப்ப என்ன சொன்னனி „ என்று கேட்க’இல்லைச்
சேர் „ என்று சொல்லிக் கொண்டே புஸ்பகலாவைப் பார்க்க,அதைக் கவனித்த பொன்ரனையா மாஸ்ரர்’ இப்ப அவாவையேன் பார்க்கிறாய் நீ என்ன சொன்னியோ அதைச் சொல் „ என்று கேட்க’ இல்லை சேர் ஞானத்துக்குக் காய்ச்சல் என்று எங்களுக்குத் தெரியும் சேர், நாங்களும் வீட்டைப் போகச் சொன்னனாங்கள், அதற்கு ஞானம் கவ்வனட்;மென்ற் சோதனை வரப் போகுது பள்ளிக்கூடத்துக்கு வராமல் நிற்கக் கூடாது என்று சொன்னவர்.மருந்தைக்கூட இஞ்சை கொண்டு வந்து உரசிக் குடிச்சவர்’ அதைத்தான் நான் சொன்னனான் என்று சொல்கிறான்.
„அப்ப இதைத்தான் நீ முணுமுணுத்தனி’ என்று பொன்னையா மாஸ்ரர் கேட்க,’ஓம் சேர் அதைத்தான் சொன்னனான், வேணுமெண்டால் இவரைக் கேட்டுப் பாருங்கள் „என்று தனக்கு வலப்பக்கதில் இருந்த பாலசிஙகத்தைக் காட்டி „ நான் அப்படித்தானே சொன்னனான் „ என்றவன்,அவனைப் பார்த்து கண்சாடை காட்டுகிறான்.
மாணவன் முணுமுணுத்தது நன்றாகவே பொன்னையா மாஸ்ரருக்குக் கேட்டதால் அவன் பொய் சொல்கிறான் என்பதை „வேலிக்கு ஓணான் சாட்சியா „ எனச் சொன்னவர்,புஸ்பாவைப் போல நீங்களும் ஒருத்தருக்கொருத்தர் நல்ல மனசோடை பழக வேணும் „ என்றவர் „ சரி ஒவ்வொருத்தராக வாசியுங்கள் என்றவர்,’ஞானத்தாலை வாசிக்க முடியாது,அவற்றை கட்டுரையை யார் வாசிக்கப் போகிறியள் „ என்று கேட்க, புஸ்பகலாவுக்கு பயந்து எல்லாரும் அமைதியாக இருக்க „சேர் நான் வாசிக்கவா’ என்று புஸ்பகலா கேட்க, „ம் வாங்கி வாசி „ என்று சொல்ல,ஞானத்திடமிருந்து கொப்பியை வாங்கியவள்,அவனின் அச்சுப் போன்ற அழகான எழுத்தில் மயங்கி விடுகிறாள்.
![]()
காதல் வந்து விட்டாள் மொழியும் இனிக்கும் என்பார்கள்.புஸ்பகலா அவனுடைய கட்டுரையை அழகாக உச்சரித்து வாசிக்கிறதைப் பார்த்து இரசித்த பொன்னையா மாஸ்ரர்,ஞானம் எழுதியதை வாசிக்க அவனுக்குப் பொருத்தமான ஆள் நீதான் என்கிறார்.ஞானம் அவளை நிமிர்ந்து பார்க்கிறான்.
ஞானம் புஸ்பகலாவின் காதலை அறிஞ்சு வைச்சிருந்து பொன்னையா மாஸ்ரர் இப்படிச் சொன்னாரா அல்லது தற்செயலாக அவர் வாயிலிருந்து வந்ததா எனத் தெரியவில்லை.
மத்தியான இடைவேளைக்கு முந்திய ஐஞ்சு வகுப்புகளும் முடிய,மாணவர்களில் சிலர் மத்தியானச் சாப்பாடு சாப்பிடுவதற்காக அவரவர் வீடுகளுக்குப் போகிறார்கள்.
ஞானம் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் புறப்பட அவனருகில் வந்த புஸ்பகலா யாராவது பார்க்கிறாரகளா எனச் சுற்றுமுற்றும் பார்த்தபடி ஞானத்தின் நெற்றியில் கைவைத்தவள் „இதென்ன இப்பிடிச் சுடுது சரியான காய்ச்சல் காயுது,வீட்டை போக வேணடாம்,பரியாரி தந்த மருந்தைக் குடிச்சிட்டு நான் தோசை தாறன் சாப்பிடுங்கோ, சாப்பிட்டிட்டு மேசையிலை தலை வைச்சுப் படுங்கோ,போத்தலைத் தாங்கோ நான் போய் கன்ரீனிலை தேத்தண்ணி வாங்கிக் கொண்டுவந்து தாறன் „
என்று புறப்பட்டவளை „ இல்லை வேண்டாம் நீங்கள் சாப்பிடுங்கோ ,நான் வீட்டைபோய்ச் சாப்பிட்டிட்டு வாறன்,அம்மா தேடுவா „ என்று வகுப்பைவிட்டு இறங்கிய ஞானத்திடம் „ ஏலாட்டி பள்ளிக்கூடத்துக்கு வராதையுங்கோ’ என்றவள், அவன் போவதையே பார்த்தவள்,தான் கொண்டு வந்த தோசையைச் சாப்பிடத் தொடங்கினாள்.
மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு புஸ்பகலா சக மாணவிகளடன் உறசாகமாகத் திரிபவள்.கன்ரீனுக்குப் போய் வடை தேத்தண்ணி வாங்கிக் குடிப்பவள்,தோழிகளுக்கும் வாங்கிக் குடுப்பவள்.
ஞானத்தைக் காதலிக்கத் துடங்கியதிலிருந்து அவள் அமைதியானாள்.தோசையைச் சாப்பிட்டவள்,சோர்வான நடையுடன் கன்ரீனுக்குப் போய்த் தேத்தண்ணி வாங்கி அங்கேயே ஒரு மூலையிலிருந்து அமைதியாக குடிச்சவளைச் கண்ட சிலர் தங்களுக்குள் கதைக்கிறார்கள்.
ஞானம் புஸ்பகலா காதல் விசயம் ஓரளவுக்கு பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் தெரிந்தவிட்டதால் சிலருக்கு அது சரியென்றும்,சிலருக்கு அது நக்கலாகவும் இருந்தது.
என்ன பத்மினி சோர்ந்து போய் மூலையில் இருக்கிறா,என்று ஒரு மாணவி சொன்னது புஸ்பகலாவின் காதில் விழுந்தாலும் அதைக் கவனிக்காதது போல கன்ரீனை விட்டு எழுந்து வகுப்பறைக்குப் போனவள்,ஏனோ விம்மி விம்மி அழத் தொடங்குகிறாள்.யாருமே வகுப்பில் இல்லை.ஞானம் என்னோடு வாழ்வார்தானே என வாய்வி;ட்டுச் சொன்னவள் கடவுளே அவரையும் என்னையும் பிரித்துவிடாதே, சேர்த்துவை என்று குமுறிக் குமுறி அழுதவள் சோர்ந்து போய் மேசையில் தலைவைச்சுஎ படுத்து விடுகிறாள்.
(தொடரும்)
![]()