செய்திகள்

இலங்கை அணி தலைவி மாயம்-தீவிர தேடுதலில் கொரிய காவல்துறையினர்..!

ஆசிய ரக்பி தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் தலைவி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய எழுவர் ரக்பி தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இலங்கை அணியின் தலைவி துலானி பல்லே கொண்டகே இன்று (14) காணமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றையதினம் (13) போட்டியில் கலந்துகொண்டதன் பின்னர் இவர் காணமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் முகாமையாளர் இது தொடர்பாக அந்நாட்டு ரக்பி சங்க அதிகாரிகள் மூலமாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இலங்கை அணி நாட்டைவிட்டு வெளியேறும் முன்னதாக அவரை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்போட்டிகளில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பிஅணிகள் இன்றையதினம்(14) முற்பகல் 11.30 மணியளவில் இன்சியான் விமானநிலையம் ஊடாக நாட்டிற்கு புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *