கவிதைகள்

போராட முன்வருவோம் போதைக்கு எதிராக!… ( கவிதை ) …. பசுவூர்க்கோபி.

ஆயுதம் இல்லாமலே இளையோரை
அழிக்கும் போர் நடக்குது-அது
போதையென்னும் உருவில் உடலை
பொஸ்பரசாய் பொசுக்குது.
இதை அடித்தால்..
காற்றோடு பறக்கலாம்
கடலின் மேல் நடக்கலாம்
மலையேறிக் குதிக்கலாம்
மகிழ்வோடு இருக்கலாம்-என
ஆயுதம் இல்லாமலே இளையோரை
அழிக்கும் போர் நடக்குது.
குண்டுமழை கொட்டியும்
குனியாத இளைஞர்களை-முள்ளம்
தண்டுகூட நிமிராமல்
முடக்கி கிடப்பதற்கு..
ஆயுதம் இல்லாமலே இளையோரை
அழிக்கும் போர் நடக்குது.
வெளிநாட்டு காசுதன்னை
வீண்விரையம் செய்வோர்க்கு
அனுப்புகின்ற எம்மவரும்
அதர்க்குத் துணை போவோரே
வேரோடு அழிப்பதற்கு- எனி
வேறு போர் தேவையில்லை
ஊரோடு பாடைகட்டி-இளையோரை
ஒழிப்பதற்கே இம் முடிவு.
கஞ்சா போதை ஊசி கறோஜின்
நஞ்சு எல்லாம்..
நால்திசையும் காவல் நிற்க்கும்-நம்
முப்படைக்கும் தெரியாமல்
எப்படையால் அது முடியும்.
அதனால்தான் கூறுகின்றேன்
ஆயுதம் இல்லாமலே இளையோரை
அழிக்கும்போர் நடக்குது.
போராட முன்வருவோம்
போதைக்கு எதிராக..
சீரோடு எம் வாழ்வை
திரும்ப நாம் பெறுவதற்கு!….
அன்புடன் -பசுவூர்க்கோபி.
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.