மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ செய்யுங்கள்: பெண்களுக்கு PETA கூறியது என்ன?

விலங்குகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாகச் சொல்லி காலம் காலமாக வழக்கில் இருந்து வரும் பழக்கத்தை மாற்றச் சொல்லியும் அதற்கு தடை விதிக்கச் சொல்லியும் அவ்வப்போது பற்பல பரபரப்பை விலங்குகள் நல அமைப்பாக விளங்கும் பீட்டா கிளப்பி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இப்படி இருக்கையில் தற்போது மற்றுமொரு புதுவிதமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறது பீட்டா அமைப்பு. அதன்படி, ஆண்கள் மாமிசங்களை உண்டால் உடலுறவு கொள்ள மாட்டேன் என பெண்கள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

மாட்டில் இருந்து பெறக் கூடிய பால் நீங்கலாக சைவ உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடிய வீகன் உணவு முறையை பின்பற்றும் படியும், அசைவ உணவு முறையை முழுவதுமாக எதிர்க்கும் பிரசாரத்தில் பீட்டா அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

பீட்டாவின் கூற்றுப்படி, பெண்களை விட ஆண்களே அதிகளவில் அசைவ உணவு சாப்பிடுவதால் அவர்களுடன் பெண்கள் பாலுறவில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் பெண்களை காட்டிலும் ஆண்களே பெருமளவில் மாமிசம் சாப்பிடுவதால் அவர்களால்தான் காலநிலை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதாவது 41 சதவிகித பசுமை வாயுக்கள் வெளியாவதற்கு அசைவ உணவு முறையே காரணமாக இருக்கிறது. குறிப்பாக முக்கிய நகரங்களில் இருக்கும் ஆண்கள்தான் நிறைய அசைவம் உட்கொள்கிறார்கள். விலங்குகளை கொல்வதோடு மட்டுமல்லாது புவிக்கும் இதனால் கெடுதலே நிகழ்கிறது.

இங்கிலாந்தில் கடந்த பத்தாண்டுகளில் 17 சதவிகித ஆண்கள் அசைவம் சாப்பிடுவதை குறைத்திருக்கிறார்கள். ஆனால் இது போதாது. ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் கோழி, மாடு, பன்றிகளை கொல்கிறோம். இது தடுக்கப்பட வேண்டும்.

அனைவரும் வீகன் பயன்பாட்டிற்கு மாற வேண்டும். ஆண்களிடம் இது பற்றி பெண்கள் எடுத்து கூறவேண்டும். இல்லையெனில் உடலுறவு கொள்ள மாட்டேன் என போராட்டம் செய்ய வேண்டும். அதேபோல இல்லறத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது வாயை, நாக்குகளை சோதித்து அசைவம் சாப்பிட்டிருக்கிறார்களா என பாருங்கள்.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால்தான் உடலுறவு கொள்ளலாம் என்றும் கூறுங்கள். ஆண்கள் வீகனாக மாறும்வரை பெண்கள் செக்ஸ் ஸ்டிரைக் செய்யுங்கள் என பீட்டா கூறியிருக்கிறது. பீட்டாவின் இந்த கூற்றுக்கு பல தரப்பிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button